Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோபகிருது தமிழ் வருடத்தில் மழை எப்படி? வெள்ளமா? வறட்சியா? பஞ்சாங்கம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராஜாவாக புதன் வருவதால் இந்த ஆண்டு மூன்று மரக்கால் அளவு அதாவது முக்குறுணி மழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. நூறு யோஜனை நீளமும், நூறு யோஜனை அகலமும் நூறு யோஜனை ஆழமும் கொணண்டதே ஒரு மரக்கால் ஆகும். இது போன்று மழை பொழிந்து இதில் ஐந்தில் ஒரு பங்கு மழை பூமியிலும் பத்தில் மூன்று பங்கு மழை மலைகளிலும் காடுகளிலும் அரை பங்கு மழை சமுத்திரத்திலும் பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது.

சோப கிருது என்ற சமஸ்கிருத பெயருக்கு மங்கலம் என்ற அர்த்தம் உள்ளது. சோபகிருது வருட வெண்பாவில்

Sobakiruthu Tamil New year palan 2023: Panchangam prediction rain in Tamil Puththandu

"சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்
கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்
உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகு மென்றே யுரை". என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சோப கிருது வருடத்தில் மக்கள் எல்லா நலன்களையும் பெற்றுவர். கோப குணங்கள் குறையும். போட்டி, பொறாமை குணங்கள் இல்லாமல் போகும். நற்பலன்கள் மேலோங்கும். சுப காரியங்கள் நடந்தேறும். உலகின் பழமையான நகரங்கள் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். மழை சிறப்பாக பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்றும் எல் நினோ உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது குறித்து பார்க்கலாம்.

மங்களகரமான சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 1ஆம் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூர்ய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2-59 மணிக்கு சிம்ம லக்னம் கடக நவாம்சையில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.

ஆனி 10ஆம் தேதி ஜூன் 25ஆம் தேதி ஞாயிறுக்கிழமை ஆடி 8ஆம் தேதி ஜூலை 24ஆம் தேதி திங்கட்கிழமை மழை பெய்யும். ஆவணி 8ஆம் தேதி ஆகஸ்ட் 23ஆம் தேதி புதன்கிழமை மழை பெய்யும். புரட்டாசி 4ஆம் தேதி செப்டம்பர் 21ஆம் வியாழக்கிழமை மழை பெய்யும். புரட்டாசி 19ஆம் தேதி அக்டோபர் 06ஆம் தேதி வெள்ளிக்கிழமை மழை பெய்யும். ஐப்பசி 02ஆம் தேதி அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை மழை பெய்யும். கார்த்திகை 1ஆம் தேதி நவம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மழை பெய்யும். மார்கழி 1ஆம் தேதி டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும். தை 11ஆம் தேதி 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மழை பெய்யும். இந்த தேதிகளில் மழை பொழியும் என்றும் அவ்வாறு மழை பெய்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் சித்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிய வானியல் நிகழ்வுகள் கண்டறியப்படும். நட்சத்திர கூட்டத்திலோ அல்லது சூரியனில் சில அதிசய மாற்றங்கள் அறிவியலால் கண்டறியப்படும். ஐந்து அல்லது ஆறு புயல்கள் வங்காள விரிகுடாவில் உருவாகி தமிழகத்தை கடந்து செல்லும். அதனால் நல்ல மழை நமது தமிழகத்திற்கு உண்டு.

சோபகிருது தமிழ் புத்தாண்டில் தன லாபதிபதியான புதனுடன் ராகு உடனும் சேர்ந்து சனி, கேது பார்வை பெறுவதால் இவ்வருடம் தெய்வ காரியங்கள்,புண்ணிய காரியங்கள் அதிகரிக்கும். நாட்டின் வட கிழக்கில் உள்ள தெய்வ ஸ்தலங்களில் சிறு விபத்து ஏற்படும்.

இரண்டாம் இடம் குரு மற்றும் செவ்வாய் பார்வை பெறுவதால் இவ்வருடம் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் தாராள பணப்புழக்கம் ஏற்படும். மூன்றாமிடத்தில் கேது இருந்து சூரியன்,புதன்,ராகு பார்வை பெறுவதால் புதுவித கிருமிகளால் மக்களுக்கு மூக்கு, கழுத்தில் நோய் உண்டாகும்.

நான்காமிடம் சுக்கிரன், குரு பார்வை பெற்று நான்காமிடத்திற்குரிய செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இவ்வருடம் தொழில் விருத்தி நன்றாக இருக்கும். வெண்பட்டு ஜவுளி, தங்கம், கட்டுமானப்பொருட்கள், தொழில் நன்கு விருத்தியடையும். நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும். சென்ற வருடத்தை விட இவ்வருடம் விவசாயிகள் நல்ல லாபத்தை அடைவார்கள்.

மண் சரிவு, பனி மலைகளில் பனி சரிவு ஏற்படும். கடல் மட்டம் உயர்ந்து நீரால் பல இந்தியா பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் அருகில் இருக்கும் நாடுகள் பாதிக்கும். பொதுவாக இந்த ஆண்டு நல்ல மழை பொழியும். தொழில் விருத்தி அடையும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+