Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கோடிகளை குவிக்கப்போகும் குபேர ராசிக்காரர்கள்..என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணம் பலவித நன்மைகளைத் தரப்போகிறது. நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சியாகும் சோபகிருது புத்தாண்டில் பல சுப காரியங்கள் நிகழப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! உங்களுக்கு இது அற்புதமான பலன்களை தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. தொழில்,வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு குரு ராகு இணைவினால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் புரமோசன் கிடைக்கும். ஜென்ம ராசியில் உள்ள குரு பகவானின் பார்வை 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடி வரும். மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். பெண்கள் எதையும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வந்து நீங்கும். முன்னோர்களின் ஆசியால் புத்திரபாக்கியம் கைகூடி வரும். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள். கஷ்டங்கள் கவலைகள் நீங்கும்.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Mesham to Kanni

ரிஷபம்: சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. எதையும் மனதிற்கு வைத்து வெற்றி பெற்ற பின்னர் வெளியே சொல்லலாம். கோபம் குரோதம் நீங்கும். அச்சம் நீங்கி ஆற்றல் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வீட்டிலும் வெளியிடத்திலும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் வரப்போகிறது. கால்களில் கவனம் தேவை. வீட்டில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். வங்கிக் கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதிற்கு ரகசியம் காப்பது நல்லது. மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் ராசி அதிபதி புதன்தான் இந்த ஆண்டு ராஜா என்பதால் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். தெய்வங்களின் அருளாசியும் முன்னோர்களின் அருளும் கிடைக்கப்போகிறது. தொழிலில் வெற்றியும் லாபமும் கிடைக்கப்போகிறது. வேலையில் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். இதனால் வீடு மாற்றம் உண்டாகும். விஐபிகளின் அறிமுகமும் அதனால் வெற்றிகளும் தேடி வரும். திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. ராகு கேது இடப்பெயர்ச்சி வரும் அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. ராகு லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வேலையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். அற்புதமான பலன்களை இந்த சோபகிருது தமிழ் புத்தாண்டில் அனுபவிக்கத் தயாராகுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அற்புத மாற்றங்கள் ஏற்படும்.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Mesham to Kanni

கடகம்: சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக உள்ளது. புத்திசாலித்தனம் கூடும். அஷ்டமத்து சனியால் அல்லல் பட்டுக்கொண்டிருப்பீர்கள். பாக்ய ஸ்தானத்தில் ஓராண்டு பயணம் செய்த குருபகவான் புத்தாண்டு முதல் தொழில் ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் இணைகிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற நட்புகள் கூட்டாளிகளை விளக்குங்கள். எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். துன்பங்கள் துயரங்கள் முடிவுக்கு வரப்போகிறது. கால்களில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திருவள்ளூரில் அருள்பாலிக்கும் வீர ராகவ பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் வியாழக்கிழமையன்று சித்தர்கள் ஆலயம் சென்று வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும்.

சிம்மம்: சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய மகிழ்ச்சியும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இந்த புத்தாண்டில் நிஜமாகவே நீங்கள் ராஜாதான். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்கப்போகிறீர்கள். ராகு உடன் குருவும் இணைந்திருப்பதால் உங்களுக்கு ராஜயோகம்தான். நிறைய பண வரவு வரும். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவது வெற்றியைத் தரப்போகிறது. சொந்த பந்தங்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். புத்திரபாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வந்து விட்டது. நரசிம்மர் வழிபாடு நாளெல்லாம் நன்மை செய்யும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர அதி அற்புதமான யோகத்தை சோபகிருது புத்தாண்டு அளிக்கப்போகிறது.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Mesham to Kanni

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு ஆண்டு கோள்களாக சனி, குரு, ராகு, கேதுவின் பயணங்களைப் பார்த்தால் ஒவ்வொரு செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டியிருக்கும். எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். திடீர் யோகங்கள் வரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். திடீர் பண வருமானம் வரும் நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். குருவும் ராகுவும் அஷ்டமத்து ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் இருப்பவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலமாகும். பொறுப்புகள் கூடும், உடலில் அசதியும் சோர்வும் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. பொது இடங்களிலும் வேலை செய்யும் இடங்களிலும் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது அவசியம். அரசு விசயங்களில் கவனம் தேவை. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். கேது உங்கள் ராசிக்கு வருகிறார் ராகு ஏழாம் வீட்டில் அமரப்போவதால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். சொந்த பந்தங்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். முன்னோர்கள் கடன்களை தீர்த்து சாப விமேசனம் பெறுவீர்கள். குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்று வர அற்புதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+