Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ராஜாதி ராஜ யோகம்..வெற்றிகள் யாருக்கு வசமாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றிகளை தேடி தரப்போகிறது. ராஜாதி ராஜயோகம் கைகூடி வரும் நினைத்த காரியத்தை நிறைவேற்றும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் பயணத்தால் துலாம்,விருச்சிகம் தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சோபகிருது ஆண்டில் நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியால் என்னென்ன நன்மைகள் நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Thulam to Meenam

துலாம்: குரு பகவான் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் ராகு உடன் இணைகிறார். உங்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான கால கட்டமாக இருக்கப்போகிறது. குருபகவானின் அற்புதமான பார்வை நேரடியாக கிடைக்கிறது. உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வாழ்க்கை துணையினால் வசந்தகாலம் வீசப்போகிறது. மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.
ராகு பகவான் அக்டோபர் மாதம் ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரி, தொல்லை, வம்பு வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பொருளாதார வளம் அற்புதமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் உதவி மாணவர்களுக்கு தேடி வரும். உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது. மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்கள் சோபகிருது புத்தாண்டில் ராஜாவாக வாழப்போகும் யோகம் கைகூடி வரப்போகிறது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே..உங்களுக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. ஏழரை சனி முடிந்த பின்னரும் அடுத்தடுத்து எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்தீர்கள். இப்போது நான்காம் வீட்டில் உள்ள சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக மாறி சங்கடங்களை தந்து கொண்டிருக்கிறார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். மன ரீதியாக உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக மாறுவீர்கள். எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் புறந்தள்ளி விடுவீர்கள். இந்த ஆண்டில் முக்கியமாக தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். ஆறாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவ, மாணவிகள் படிப்பில் கவனமாகவும் அக்கறையுடனும் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. கால பைரவரை ராகு காலத்தில் நல்லெண்ணெயில் மிளகு தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு யோகங்களும் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் மாற்றங்களும் நடைபெறப்போகிறது. குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுடைய பொருளாதார வளம் சிறப்படையும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. இல்லத்திலும் உள்ளத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியை தரப்போகிறது. குரு ராகுவின் சேர்க்கை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலைச்சுமை நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. தனுசு ராசிக்காரர்களுக்கு நாடாளும் யோகம் தேடி வரப்போகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கைகூடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. பண பிரச்சினைகள் நீங்கும். ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வர சகல நன்மைகளும் அதிகரிக்கும். காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட திருஷ்டி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Thulam to Meenam

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீர்கள். கடன் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் உங்களுக்கு குரு பகவான் பொருளாதார வளத்தை தரப்போகிறார். சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுக்கு நிறைய சுகங்களை தரப்போகிறார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார வளம் அதிகரிக்கும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தேடி தேடி பணம் வரும். ராகு பகவான் மூன்றாம் வீட்டிற்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வருகிறார். இளையசகோதரர்கள் வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. பேசும் போது கவனமாக யோசித்து பேசுவது அவசியம் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். கடந்த சில ஆண்டுகாலமாகவே இருக்கும் உடல் நல பிரச்சினைகள், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கப்போகிறது. மொத்தத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு அற்புதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகும் தமிழ் புத்தாண்டாக அமைந்துள்ளது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. எத்தனையோ இடர்பாடுகள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தாய் வழி சொத்துக்கள் தேடி வரப்போகிறது. மிகவும் அற்புதமான ஆண்டாக உள்ளது என்றாலும் பண விவகாரங்களில் கவனம் தேவை. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள். வீண் ஆடம்பரம் உங்களுக்கு வீண் செலவுகளை இழுத்து விட்டு விடும். கண் திருஷ்டி அதிகமாகும் கவனமாக இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளிலும் தெளிவு தேவை. நீங்கள் எதையாவது பேச அதை கேட்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கிறது. வேலை தொழிலில் இடமாற்றம் ஏற்படும். குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் ராகு வரப்போவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நகை சேர்க்கை அதிகரிக்கும். நிறைய நகை வாங்குவீர்கள். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழுங்கள். நரம்பு பிரச்சினைகள் வரலாம். பிள்ளையார்பட்டியில் அருள்பாலிக்கும் கற்பக விநாயகரை வணங்குவது நல்லது. நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. மலைபோல் வந்த பிரச்சினை பனி போல விலகும். சோபகிருது புத்தாண்டில் நல்லதே நடக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

Sobakiruthu Tamil New year palan 2023:Tamil Puththandu rasi palan for Thulam to Meenam

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். ஏழரை சனி உங்களுக்கு பல படிப்பினைகளை தரப்போகிறது. குடும்ப ஸ்தானத்தில் குருவும் ராகுவும் இணைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொருளாதார வளம் நன்றாக இருக்கும். பார்க்கும் இடம் எங்கும் பணம் வரும். தேடிப்போகும் திசை எங்கும் நல்லது நடக்கும். ஏழரை சனியால் தேவையற்ற பிரச்சினைகளை நினைத்து கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். சஞ்சலங்கள் உங்களை சங்கடப்படுத்தும் அதுவே உங்கள் தூக்கத்தை கெடுக்கும். வருவது வரட்டும் நடப்பது நடக்கட்டும் என்று எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள். எதிரிகள் எட்டு திசையிலும் தெறித்து ஓடுவார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரப்போகிறது. இந்த ஆண்டில் மதுரை மீனாட்சியை வணங்க நன்மைகள் நடைபெறும். சோபகிருது புத்தாண்டில் தீயவை குறைந்து நல்லவைகள் அதிகம் நடைபெறும் என நம்புங்கள் நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+