சூரிய கிரகணம் 2023.. பழிக்குப் பழியாக சூரியனை விழுங்குமா ராகு?.. புராண கதை சொல்வதென்ன
சென்னை: சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். சூரியனையும் சந்திரனையும் பழி வாங்க ராகுவும் கேதுவும் சில மணி நேரம் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது பற்றிய சுவாரஸ்யமான புராண கதைகளை பார்க்கலாம்.
இந்து சமய புராணங்களின் படி, காஸ்யப முனிவர்-அதிதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தேவலோக வாசிகளான இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்கள். அதேபோல் காஸ்யபர்-திதி தம்பதிக்கு பிறந்தவர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்கள். இதனால் தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் என்றைக்குமே ஏழாம் பொருத்தமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கிருதயுகம் நடைபெற்ற சமயத்தில், அமுதம் பருகினால் என்றைக்கும் இளமையாகவும், அதிக பலமும், மரணமே ஏற்படாமல், சுகபோகமாக வாழலாம் என்பதை அறிந்த இந்திரன் முதலான தேவர்கள், அந்த அமுதம் பாற்கடலின் அடியில் உள்ளதை அறிந்து, பாற்கடலில் வாசம் செய்யும் திருமாலை தஞ்சமடைந்தனர். அனைத்தையும் உணர்ந்தவரான திருமாலும், பாற்கடலை கடைவதற்கு மந்தார மலையை மத்தாகவும், தான் சயனிக்கும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொடுத்து உதவினார்.
பிரம்மாண்டமான பாற்கடலை கடைவதற்கு தங்களால் முடியாது என்பதால், உதவிக்கு தன் சகோதரர்களான அசுரர்களையும் துணைக்கு அழைத்தனர். அவர்களும், தாங்கள் பாற்கடலை கடைவதற்கு உதவ தயார் என்றும், அதற்கு பிரதிபலனாக, அமுதத்தில் சரிபாதி தங்களுக்கும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
தேவர்களும் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அசுரர்களின் உதவியோடு பாற்கடலை கடைந்தனர். அபோது அதில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. ஆனால், அமுதத்தை அசுரர்கள் பருகினால், அவர்களை சமாளிக்கவே முடியாது, ஏற்கனவே அவர்களால் ஏகப்பட்ட தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். இதில் அமுதத்தையும் உண்டால், தேவர்களான தங்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், மீண்டும் திருமாலை தஞ்சமடைந்தனர்.
அசுரர்களுக்கு அமுதம் கிடைப்பதை தடுக்க நினைத்து மோகினி வடிவம் எடுத்தார் திருமால். மோகினியின் அழகில் சொக்கிப்போன அசுரர்கள், மோகினியே அனைவருக்கும் அமுதத்தை பரிமாறட்டும் என்று சொன்னார்கள். அதற்கு தேவர்களும் சம்மதித்தனர். ஆனால், யாருக்கு முதலில் பரிமாறுவது என்பதில் தகராறு ஏற்படவே, அமுத கலசத்தின் மேல் பகுதியில் இருக்கும் தெளிவான அமுதத்தை தேவர்களும், அடிப்பகுதியில் இருக்கும் அமுதத்தை அசுரர்களும் எடுத்துக்கொள்வது என்று முடிவாயிற்று.
முதலில் தேவர்கள் இருந்த வரிசையில் அமுதத்தை மோகினி பரிமாறினாள். ஆனால் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று சந்தேகப்பட்ட ஸ்வர்பானு என்ற அசுரன் மாறு வேடத்தில் தேவர்கள் இருந்த வரிசையில் உட்கார்ந்தான். இந்த விஷயம் மோகினி வடிவில் இருந்த திருமாலும் அறிவார். இதை சூரியனும் சந்திரனும் பார்த்துவிட்டனர். ஆனால், அதற்குள் மோகினி ஸ்வர்பானுவுக்கு அமுதத்தை அளித்து விட்டார்.
ஸ்வர்பானுவும் அவசர அவசரமாக அமுதத்தை பருகிவிட்டான். சூரியனும் சந்திரனும், உடனடியாக இதை மோகினியிடம் சென்று உண்மையை போட்டுக்கொடுத்து விட்டனர். இதைக் கேள்விப்பட்ட மோகினி தன்னிடம் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் ஸ்வர்பானுவின் தலையும் உடலும் துண்டாகி விழுந்தது ஆனாலும், அமுதத்தை உண்டதால் உயிர் போகாமல் தலையும் உடலும் தனித்தனியாக விழுந்து கிடந்தும் துடித்துக்கொண்டிருந்தது.

அசுரர்கள் ஒப்பந்தத்தை மீறியதால், அவர்களுக்கு அமுதத்தை அளிக்காமல் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கிவிட்டார். ஸ்வர்பானுவால் தான் தங்களுக்கு அமுதம் கிடைக்காமல் போனது என்பதை அறிந்த அசுரர்கள் ஸ்வர்பானுவை அசுர குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர். தலை வேறு உடல் வேறாக கிடந்த ஸ்வர்பானு திருமாலை வணங்கி தங்களுக்கு நல் வழி காட்டுமாறு வேண்டினான்.
திருமாலும் மனமிறங்கி, உடலோடு பாம்பின் தலையையும், தலையோடு பாம்பின் உடலையும் பொருத்தி இருவருக்கும் ராகு, கேது என்று பெயரிட்டார். இருவரையும் நவக்கிரக மண்டலத்தில் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் நேர் எதிர் திசையில் சஞ்சரிக்கும் படி அருள் பாலித்தார். அன்று முதல் ராகுவும் கேதுவும் நவக்கிரக மண்டலத்தில் சஞ்சரித்து வருகின்றனர்.
தான் இப்படி தலை வேறு உடல்வேறாக போவதற்குக் காரணம் சூரியனும் சந்திரனும் தான் என்பதை உணர்ந்து, அவர்கள் இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று விரும்பி பிரம்மனை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து வரம் பெற்றனர். அதன்படி, ஆண்டு தோறும், நான்கு முறை சூரிய சந்திரரின் நிழல் பூமியின் மேல் விழாமல் தடுக்கும் வரத்தை கொடுத்தார்.
குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு முறை அமாவாசை நாளில் சூரியனின் நிழலையும், பவுர்ணமி நாளில் சந்திரனின் நிழலையும் பூமியின் மேல் படாமல் தடுத்து வருகின்றனர். இதையே சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய ஒளி பூமியின் மேல் விழாமல் தடுக்கப்படுவதால் ஏற்படுவதே சூரியகிரகணம் ஆகும்.

பவுர்ணமி நாளில் சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் ஏற்படுவது சந்திர கிரகணம் என்று அறிவியில் பூர்வமான உண்மையாகும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் வியாழக்கிழமை 20ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது கங்கண சூரியகிரகணம் என்றழைக்கப்படுகிறது. இது அற்புதமான நிங்கலூ சூரிய கிரகணம் ஆகும்.
இது மேஷ ராசியில் ராகு உடன் சூரியன் இணையும் போது நிகழ்வதால் ராகு கிரகஸ்த சூரியகிரகணம் என்று கூறப்படுகிறது. மேஷ சூரிய ராசியில் கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன், சந்திரன், புதன், ராகு ஆகிய 4 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்பதால் பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications