ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா ஆரோக்யம், ஐஸ்வர்யம் தரும் ஹோமங்கள்
தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி வருகிற 31.12.2020 வரை யாகத்திருவிழாவாக ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் காரியசித்தி ப
ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி வருகிற 31.12.2020 வரை யாகத்திருவிழாவாக ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் காரியசித்தி பெறவும் நடைபெற உள்ளது.
எட்டாவது நாளான நேற்று 08.01.2020 புதன்கிழமை குரு கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் ஞானம் பெறவும், மன அமைதி கிடைக்கவும், வாழ்வில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கவும், கற்பனை சக்தி அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு, செல்வம் போன்ற பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் குரு பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், நாவ பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணா மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 9வது நாளான இன்று 09.01.2020 வியாழக்கிழமை ருண, ரோக நிவர்த்தி பெறவும், சத்ரு பயம், கெட்ட சக்திகள் விலகவும், உறவினர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கவும், காரிய தடைகள் அகலவும், அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வ சேர்க்கை போன்ற பாக்கியங்களை பெறவும் ஸ்ரீ நரசிம்மர் ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த யாகத்திருவிழாவின் முக்கிய அம்சமாக 18.01.2020 முதல் 25.01.2020 வரை கீழ்கண்ட யாகங்கள் நடைபெறுகிறது.
18.01.2020 சனிக்கிழமை - இயற்கை சீற்றம் குறைய - ஸ்ரீ அஷ்டவசுக்கள் யாகம்.
19.01.2020 ஞாயிற்றுக்கிழமை - தரித்திரம் நீங்க - ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்.
20.01.2020 திங்கள்கிழமை - தம்பதிகள் சந்தான பாக்யம் பெற - ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமம்.
21.01.2020 செவ்வாய்கிழமை - உலக நலன் கருதி, சகல ஐஸ்வர்யம் கிடைக்க - ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம்.

22.01.2020 புதன்கிழமை - ஐஸ்வர்யம் பெருக - ஸ்ரீ ரங்கநாதர் ஹோமம்.
23.01.2020 வியாழக்கிழமை - களத்திர தோஷம் நீங்க - ஸ்ரீ சுக்கிர கிரக சாந்தி ஹோமம்.
24.01.2020 வெள்ளிக்கிழமை - குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலக, மாங்கல்ய பலம் பெற - சர்வ சக்தி யாகம்
25.01.2020 சனிக்கிழமை - சனி கிரக தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் கூடவும் - சனி சாந்தி ஹோமம்.
10வது நாளான நாளை 10.01.2020 வெள்ளிக்கிழமை தம்பதிகள் அன்னோன்யம், கேது தோஷ நிவர்த்தி, ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, முற்பிறவி மற்றும் இப்பிறவி கர்மாக்கள் அகல மேலும் பல்வேறு நன்மைகள் பெறவும் ஸ்ரீ சித்ரகுப்த ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகங்களில் அந்தந்த தேவதைகளுக்குரிய பழங்கள், புஷ்பங்கள், மூலிகைகள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications