Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப ஒற்றுமை தரும் ஸ்ரீ ராமநவமி விழா : கும்பகோணம் ராமசாமி கோவிலில் கோலாகலம் - நாளை தேரோட்டம்

கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் தேரோட்டம் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவிலில் நாளைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

சித்திரை வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு பங்குனி வளர்பிறை நவமி தினமான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் என்பது நம்பிக்கை.

ராம நவமி விரதம்

ராம நவமி விரதம்

ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை. இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர்.

தென்னக அயோத்தி

தென்னக அயோத்தி

கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இங்கு ராமர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலிப்பதால் இக்கோவில் தென்னக அயோத்தி என்று அழைக்கப்படுகிறது.

ராம நவமி விழா கொண்டாட்டம்

ராம நவமி விழா கொண்டாட்டம்

பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராம நவமி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லெட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராம நவமி தேரோட்டம்

ராம நவமி தேரோட்டம்

ராம நவமி விழா நாடு முழுவதும் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக எளிமையாக ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்

இந்த ஆண்டு பங்குனி 27ஆம் தேதி ஏப்ரல் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகிழமை அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம நவமி நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நாமம் துதித்து விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களின் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+