சுபகிருது தமிழ் புத்தாண்டு பலன்: யாருக்கு செல்வ வளம் பெருகும் - அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?
சுபகிருது தமிழ் புத்தாண்டில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் செல்வ வளம் பெருகும் என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் இன்று பிறந்துள்ளது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். தமிழ் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்.
சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு, சொத்து வாங்கலாம். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நோய்கள் நீங்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயும் பிள்ளைகளாலும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச்செல்ல நன்மைகள் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத சரியான நேரம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகளும் வரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வருட இறுதியில் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.

ரிஷபம்
இந்த ஆண்டு நிறைய லாபங்கள் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீண்ட காலமாக தடைபட்ட சுபகாரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்கலாம். புதிய தொழில் தொடங்கவும் நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. புது வீடு கட்டலாம், வீடு கட்டி முடித்தவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். திருமணம் ஆகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு திருமணம் பேசி முடிவு செய்யலாம். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு பதவியும் பாராட்டும் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு இது நல்ல காலமாக உள்ளது. படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெறலாம்.

மிதுனம்
உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படும். குருவின் பார்வை குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுகிறார். நான்காம் வீடான சுக ஸ்தானம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது குருவின் பார்வை படுகிறது. குருவின் பயணம் சுமாராக இருந்தால் பார்வையால் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் என்றாலும் நிறைய பண வரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நெருப்பு வாகனம் போன்றவைகளில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் செல்வது அவசியம். அரசு மூலம் கௌரவப் பதவி உயர்வு தேடி வரும். வேலை தொழில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும் இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

கடகம்
சுபகிருது ஆண்டில் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வண்டி வாகனம் வாங்கலாம். வீடு கட்டவும் முயற்சி செய்யலாம் பாரம்பரியமிக்க பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை கட்டிட தொழில் செய்பவர்களுக்கு நல்ல கணிசமான லாபம் கிடைக்கும். . உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். அதிக கடன் பிரச்சினையில் சிக்க நேரிடும். கடன்களில் இருந்து தப்பிக்க செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். இரட்டிப்பு மகிழ்ச்சியில் சந்தோசமும் நிறைந்த வருடமாக உள்ளது.

சிம்மம்
பொருளாதாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்கள் வாங்கலாம். வீடு சொத்து வாங்குவதற்கு கடன் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. அடுத்தவர்களை நம்பி தொழில் வியாபாரத்தை ஒப்படைப்பதை தவிர்க்கவும். சுபகாரியங்களில் தடை ஏற்படும் புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு இணைய வாய்ப்புள்ளது கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்லதொரு தமிழ் புத்தாண்டு பிறப்பதால் வரவேற்க தயாராகுங்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் உதவிகள் தேடி வரும். குரு பலம் வந்திருப்பதால் திருமண சுப காரியம் கை கூடி வரப்போகிறது. ஒரு புதிய சொத்துக்களை வாங்குவதற்கு வாய்ப்பு கைகூடி வருகிறது. சிலருக்கு நல்ல வேலை மாற்றங்கள் ஏற்படும்.

துலாம்
சுபகிருது ஆண்டில் நல்ல வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். விழிப்புடன் இருந்தாலே தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்லூரி கல்வி படிப்பதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சரியான நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு சுறுசுறுப்பு கூடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும்.

விருச்சிகம்
தமிழ் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. பாக்கெட்டில் பணம் நிறையும் அளவிற்கு பணப்புழக்கம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். கௌவரவம் அந்தஸ்த்தும் தேடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். அதிர்ஷ்டமான ஆண்டாக அமையப்போகிறது. நினைத்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் புதிய யுக்தியை புகுத்தி வெற்றி பெறுவீர்கள். சுப காரியங்களுக்காக கடன் வாங்குவீர்கள். கோச்சார ரீதியாக குருபலன் கை கூடி வந்துள்ளது. திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறீர்கள். மகாலட்சுமி யோகம் தேடி வரும் செல்வ நிலை உயரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கப் போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மன மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

தனுசு
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சாதனைகள் புரியப்போகிறீர்கள். ஏற்றுமதி தொழில் லாபத்தைத் தரும். ஆன்லைன் வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தரும். வேலை வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கண்டங்கள் விலகும். நோய்கள் நீங்கப்போகிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். உங்களுடைய ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நண்பர்கள் எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். நல்ல பண வருமானம் வந்து சேரும்.

மகரம்
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சுப காரியங்கள் ஏற்படும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். விட்டுக்கொடுத்து சேல்வது நல்லது. குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு ஏழாவது வீட்டில் மீது விழுவதால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். தகவல் தொடர்பு சிறப்படையும் என்றாலும் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களைத் தவிர்க்கவும். பொறுமையை கையாளுங்கள். மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பதவியில் புரமோசன் கிடைக்கும்.

கும்பம்
சுபகிருது தமிழ் புத்தாண்டு சுபிட்சமான ஆண்டாக அமைந்துள்ளது. பொற்காலம் தேடி வரப்போகிறது. ஆண்டு முழுவதும் நல்ல பணப்புழக்கம் இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் பண வரவு சரளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயர்கல்வி யோகம் கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் காலம் வரப்போகிறது. ஏழரை சனி சஞ்சாரம் சற்றே பாதிப்பை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்
பொன்னான காலம் வரப்போகிறது. நல்ல பதவி தேடி வரும். திறமைக்கேற்ப மதிப்பும் அங்கீகாரமும் தேடிவரும். திருமணம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கைகூடி வரும். இந்த ஆண்டு நல்ல செய்திகள் நிறைய தேடி வரும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மகளின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இரண்டாம் இடத்து ராகுவால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரும். வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications