Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: மேஷம் ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள்

சுப கிருது தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களின்ல சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.

மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் மேஷம் ராசியில் உள்ள அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கம்.

மேஷம்

மேஷம்

சுப கிருது புத்தாண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் பயணம் செய்கிறார். சனிபகவான் தொழில் ஸ்தானமான 10ஆவது வீட்டிலும் 11வது வீடான லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். ஜென்ம ராசியில் ராகு, களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. சூரியனின் பயணம் ராசியில் உள்ளது. புதன் சஞ்சாரம் ஜென்ம ராசியில் ஆரம்பிக்கிறது. ராசி நாதன் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார்.

சுப விரைய செலவுகள்

சுப விரைய செலவுகள்

குருவின் பயணத்தால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குருவின் பார்வை 4,6,8ஆம் வீடுகளின் மீது விழுவதால் வீடு, சொத்து வாங்கலாம். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நோய்கள் நீங்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயும் பிள்ளைகளாலும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச்செல்ல நன்மைகள் நடைபெறும்.

வெளிநாடு செல்லும் யோகம்

வெளிநாடு செல்லும் யோகம்

வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத சரியான நேரம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். மருத்துவ செலவுகளும் வரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் சமையல் அறையில் நெருப்பு, கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.

திடீர் பணவரவு

திடீர் பணவரவு

சொத்து பாகப்பிரிவினையால் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வருட இறுதியில் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த ஆண்டு மறக்காமல் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும். மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமி நாட்களில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+