Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2021: ரிஷபத்தில் ராகு, புதனுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் - பலன்கள் பரிகாரங்கள்

சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமரும் போது சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் அமையும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சுகங்களை தரக்கூடிய கிரகம் சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் ராகு புதனுடன் இணைந்துள்ளார். ஆட்சி பெற்ற சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கப் போகிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் அமையப்போகிறது.

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம் அல்லது துலாமில் ஆட்சியோ, மீனம் ராசியில் உச்சமோ பெற்றிருந்து அது கேந்திர ஸ்தான வீடுகளான 1,4,7,10 ஆம் இடமாக அமையப்பெற்றால் அந்த ஜாதகருக்கு மாளவியா யோகம் அமையும். இந்த மாளவியா யோகம் அமைந்த ஜாதகர்களுக்கு மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும், கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமும் சந்தோஷமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். வீடே லட்சுமி கடாட்சமாக இருக்கும். கோச்சார ரீதியாக சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்று அமரும் போதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜாதகத்தில் மாளவியா யோகம் அமையப்பெற்ற ராசிக்காரர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். சொகுசான வாழ்க்கை அமையும். வாகன யோகம் கிடைக்கும். மாடி வீட்டில் வசதியான வாழ்க்கை வாழும் யோகம் அமையும். நிம்மதியும் சந்தோஷமும் இந்த மாளவியா யோகம் அமைந்துள்ள ராசிக்காரர்களுக்க கிடைக்கும். உங்களுடைய சுய ஜாதகத்தில் மாளவியா யோகம் இருந்து இப்போது கோச்சார ரீதியாகவும் சுக்கிரன் நல்லநிலைக்கு வரும் போது நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி. இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் சூரியன் உடன் சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இன்று முதல் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் காதல் நாயகன் சுக்கிரன் இன்று முதல் உங்கள் ராசியில் ராகு,புதன் உடன் குடியேறப்போகிறார். . நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளை தாமரை வைத்து வணங்கி வரலாம்.

மிதுனம்

மிதுனம்

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் உங்கள் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்து குடியேறியுள்ளார். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல காரியம் நிறைய நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வெள்ளியில் ஓபல் ரத்தினக்கல் பதித்த மோதிரத்தை அணிய நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைகிறார். ராகு, புதனுடன் சுக்கிரன் இணைவதால் பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம்.மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். மருத்துவ செலவுகள் எற்படும். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் ராகு புதனுடன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும் கவனம் தேவை. சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

தனுசு

தனுசு

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவந்திருக்கிறார். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது அன்பை பொழிவார். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது விரலில் வைர மோதிரம் அணியலாம்.

மீனம்

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்க ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+