சுக்கிரன் பெயர்ச்சி 2021: கடக ராசியில் செவ்வாய் உடன் குடியேறிய காதல் நாயகன் சுக்கிரன்

காதல் நாயகன் சுக்கிரன் கடக ராசியில் செவ்வாய் உடன் குடியேறப் போகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியில் பிறந்தவர்களுக்கும் என்ன பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பகவான் அமர்ந்திருக்க இப்போது மிதுனம் ராசியில் உள்ள சுக்கிரன் இன்று முதல் கூட்டுக்குடித்தனம் நடத்தப் போகிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் களத்திர காரகன், காதல் நாயகன். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி பெறுகிறார். மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன், கன்னி ராசியில் நீச்சம் பெறுகிறார். ஒருவரின் இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.

இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சுக்கிரப் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகம், பாதகம் என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீடான சுக சஞ்சரிப்பதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். உங்களின் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, குடும்ப வாழ்க்கையில் துணையுடன் உங்கள் அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் ஏற்றம் பெறக்கூடிய காலமாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை மொச்சை சமைத்து சாப்பிடலாம். அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை வெள்ளை நிற மலர்களை வாங்கிக் கொடுக்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். மருத்துவரிடம் சென்று உடல் நலத்தை பரிசோதனை செய்வது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் புதிய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபடலாம்.

 மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் சஞ்சாிக்கப் போகிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

கடகம்

கடகம்

காதல் நாயகன் சந்திரன் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய் உடன் குடியேறப்போகிறார். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்க நகைகள் வாங்கலாம். பயணங்களால் நன்மை ஏற்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குடியேறுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். 12ஆம் இட சுக்கிரனால் ஆடம்பர செலவு ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். திடீர் பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.

கன்னி

கன்னி

லாப ஸ்தானமான 11வது வீட்டில் சுக்கிரன் அமா்ந்திருப்பது அற்புதமான இடமாகும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பண வருவாய் அதிகாிக்கும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கண் கோளாறுகள் வரலாம்.
மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.

துலாம்

துலாம்

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய பதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பாக்யங்கள் நிறைந்த காலமாக அமைந்துள்ளது. வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த காலகட்டம் குதூகலமாக அமையும். பண வருமானம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலகட்டம்.

தனுசு

தனுசு

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் விலை உயர்ந்த பொருட்கள், பணம் விசயங்களில் கவனம் தேவை. எட்டில் செவ்வாய் உள்ளதால் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் திடீர் பணவருமானம் வரும். உடல் சோர்வாக இருக்கும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

 மகரம்

மகரம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. வேலைசெய்யும் இடத்தில் பதவி உயர்வுகள் ஏற்படும். இளம் பெண்களும், ஆண்களும் எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்படும் ஊடல் முடிந்து கூடல் அதிகரிக்கும். மாலை நேரத்தில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடவும்.

மீனம்

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண வருமானம் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலும் கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் காதல் நினைவுகள் அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+