Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2021: மிதுன ராசிக்கு இடம் மாறும் சுக்கிரன் - பலன்கள் பரிகாரங்கள்

ரிஷப ராசியில் பயணிக்கும் சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் கிரகம் சுக்கிரன் தனது ராசியான ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சியாகிறார். ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாத சுக்கிரன் மே 28ஆம் தேதி மிதுன ராசிக்கு இடம்பெயர்கிறார். ஜூன் 22ஆம் தேதி வரை மிதுன ராசியில் பயணம் செய்வார். இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.

சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே.

சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இந்த மாத சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

காதல் நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.

ரிஷபம்

ரிஷபம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சங்சாரம் செய்து வந்த உங்கள் ராசி நாதன் சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சுக்கிரனுக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்மம்


சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்கிறார். பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பாக்ய ஸ்தானமான 9ஆவது வீட்டில் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்கா மந்திரம் கூறி வணங்கலாம்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் ஏழாவது வீட்டில் செவ்வாய் உடன் இணைந்துள்ளதால் பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மகரம்

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்கவும்.

கும்பம்

கும்பம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என உற்சாகத்துடன் பாடப்போகிறீர்கள்.

மீனம்

மீனம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் ஏழை பிராமணர்களுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+