சிம்மத்தில் இணைந்த செவ்வாய் சுக்கிரன்.. குருவின் பார்வையில் காதல் கிரகங்கள்.. கல்யாணம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் கிரகமான சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இன்று முதல் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி வரைக்கும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் பயணம் செய்யும் சுக்கிரன் சில வாரங்களில் வக்ரமடைந்து பயணம் செய்வார். நவம்பர் மாதம் வரைக்குமே சுக்கிரன் கடகம், சிம்மம் என மாறி மாறி பயணம் செய்வார். செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் யாருக்கு காதல் மலரும் என்று பார்க்கலாம்.

காதல் கிரகங்கள் கூட்டணி: நவ கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். காதலை தூண்டும் கிரகங்களான செவ்வாய்,சுக்கிரன் கிரகங்களின் கூட்டணியால் சிலருக்கு காதல் மலரும், சில ராசிக்காரர்களின் மனதில் காதல் மணியடிக்கும். செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். தற்போது நெருப்பு ராசியான சிம்மத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சஞ்சரிப்பதால் காதல் நெருப்பு யாருக்கு பற்றிக்கொள்ளும் என்று பார்க்கலாம்.

 Sukran Peyarchi 2023: Love horoscope Venus conjunction Mars For whom love blossoms

மேஷம்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. அதே நேரத்தில் சுக்கிரன் கூடவே இணைந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஏற்ற கால கட்டமாகும்.

கடகம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பயணம் செய்கிறார். வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் உஷ்ணமான பேச்சை ஏற்படுத்துவதார். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும்.

சிம்மம்: உங்கள் ராசியில் செவ்வாய் சுக்கிரன் இணைந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். சுக்கிரன் கூடவே பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய காதல் மலரும்.

கன்னி: விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைந்து பயணம் செய்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை கலகலப்பை உண்டாகும்.

 Sukran Peyarchi 2023: Love horoscope Venus conjunction Mars For whom love blossoms

தனுசு: உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்வதால் தம்பதியர் இடையே ஒற்றுமை மேலோங்கும். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருக்கும் காலம் இது. குதூகலமாக அனுபவிக்க தயாராகுங்கள். 5ஆம் வீட்டிற்கு அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமான செவ்வாய் ஆறாம் வீட்டு அதிபதியும் லாப ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். காதலிப்பவர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வந்துள்ளது. அதே நேரத்தில் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்: செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து பயணம் செய்கிறார். ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை செவ்வாயும் சுக்கிரனும் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். உங்கள் ராசியில் உள்ள சனியின் பார்வை செவ்வாய் சுக்கிரன் மீது விழுகிறது. அதே நேரத்தில் குரு பகவானின் பார்வையும் செவ்வாய் சுக்கிரன் மீது விழுகிறது. திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். புதிதாக காதல் மலரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+