Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி.. இன்று முதல் இனி சுகமான ராகங்கள்.. 2024ல் அரச வாழ்க்கை யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: துலாம் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்த காதல் நாயகன் சுக்கிரன் 25ஆம் தேதி இன்று முதல் இடப்பெயர்ச்சி அடைந்து விருச்சிக ராசியில் செவ்வாய் உடன் அமரப்போகிறார். புத்தாண்டில் புதுவித யோகம் தேடி வரப்போகிறது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. களத்திரகாரகன் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit from Thulam to Meenam prediction for 12 Zodiac Sign

மேஷம்: உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். . வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறலாம். பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள், காதலர்களிடையே ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்க பாதிப்புகள் குறையும்.

கடகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் கொப்பளிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது கை விரலில் வைர மோதிரம் அணியலாம்.

கன்னி: ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு சென்று சந்தனம் வாங்கித் தரலாம்.

துலாம்: உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு கல்யாணம் கைகூடி வரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறுகிறார். பெண்களுக்கு மகிழ்ச்சியான கால கட்டம். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.

தனுசு: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். கையில் உள்ள பணம் கரையும். சுப விரைய செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.

மகரம்: உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு பச்சரிசி வெல்லம் வாங்கி கொடுக்க பாதிப்பு குறையும்.

மீனம்: உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர சுக்கிரன் அருளால் சுகமான வாழ்க்கை அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+