சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023: கேது + சுக்கிரன்.. கூட்டணியால் யார் வீட்டில் குழப்பம்.. பரிகாரம் இதோ
சென்னை: சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் முதல் கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன் கேது உடன் இணைகிறார். இந்த கூட்டணியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். கேது உடன் சுக்கிரன் இணைவதால் வேலை பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: காதல் நாயகன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் கேது உடன் அமர்வதால் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. பெண்கள் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாக பழகவும். காதல் விவகாரங்கள் பிரச்சினையை ஏற்படுத்தும். பண வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரம் என்றாலும் கேது பகவான் ஊடலை ஏற்படுத்துவார் கவனம்.
மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் கேது உடன் அமரப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செலவுகளை செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி அழகுபடுத்துவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் ஏழை பிராமணர்களுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.
கடகம்: சுக்கிரன் கேது உடன் இணைந்து முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமரப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சுக்கிரன் கேது கூட்டணியால் சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும் கவனம் தேவை. புதனால் புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும்வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.
சிம்மம்: இதுநாள் வரை உங்கள் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் கேது உடன் அமரப்போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலமிது. கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும்.
அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் கேது உடன் குடியேறப்போகிறார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசியில் இருப்பதால் சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தம்பதியரிடையே பிரச்சினைகள் வந்து நீங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும்.
துலாம்: உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் கேது உடன் குடியேறப்போகிறார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தலைமேல் இருந்த பாரம் இறங்கி விட்டது. பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். படிப்பாக வெளிநாடு செல்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.
விருச்சிகம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் கேது உடன் சுக்கிரன் இணைவதால் திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். தினசரியும் சூரிய பகவானை வழிபடவும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் வீடு தேடி வரும்.
தனுசு: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கேது உடன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மகரம்: ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் கேது உடன் பயணம் செய்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
கும்பம்: உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் கேது உடன் இணைந்து மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்க்கா மந்திரம் கூற நன்மைகள் நடைபெறும்.
மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் கேது உடன் பயணம் செய்வதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கேது சுக்கிரன் கூட்டணியால் குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்களும் அதனால் திடீர் பிரிவுகள் வரும். காதல் கசக்கும். காதலர்களிடையே மன சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.
சுக்கிரன் கேது சேர்க்கை: காதல் கிரகம் சுக்கிரன் எதிர்பாலினர் மீதான கவர்ச்சி,அவர்களுடனான நட்பு,வீடு,வாகனம்,அறுசுவை உணவு,தூக்கம்,தாம்பத்ய உறவு இப்படி மனிதனுக்கு சுகம் தரும் எல்லா விஷயங்களுக்கும் அதிபதி சுக்கிரன். இவருடன் கேது சேருவது மேற்படி சுகங்களுக்கு தடை ஏற்படுத்துவதோடு இளமையில் இவற்றின் மீது அதீத கவர்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை சிக்கல் மயமாக்கும் வாய்ப்பு அதிகம். கேது என்பவர் சன்யாசத்தை தரும் கிரகமாவார். எனவே தம்பதிகள் பிரிந்து வாழ நேரலாம். வாழ்வின் பிற்பகுதியில் ஏறக்குறைய சன்யாசியை போல் வாழ வேண்டி வரலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications