சுக்கிரன் பெயர்ச்சி பலன்: கார்த்திகை முதல் டோண்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி.. மாளவியா யோகம் யாருக்கு?
சென்னை: காதல் நாயகன் சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்று கேது உடன் இணைந்து பயணம் செய்கிறார். கார்த்திகை மாதத்தில் சுக்கிரன் வலிமையான நிலையில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். ஆட்சி பெற்ற சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகமும் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமும் கிடைக்கப்போகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெற்று கேது உடன் பயணம் செய்த காரணத்தால் பல ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நவம்பர் 30ஆம் தேதி தேதி முதல் சுக்கிரன் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா யோகத்தையும் தரப்போகிறது.

மேஷம்: மேஷ ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. மாளவியா யோகத்தை பெறப்போவதால் உங்களுக்கு திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும்.
ரிஷபம்: ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. ஆறாம் வீட்டிற்கு அதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது.
மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளிடம் இருந்த தடைகள் நீங்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைக்கும். வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். பொருளாதார நிலை உயரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சர்க்கரை தானமாக தரலாம்.
சிம்மம்: தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள சுக்கிரன் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வேலை விசயமாக சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.
கன்னி: உங்கள் ராசியில் நீச்சம் பெற்று கேது உடன் பயணம் செய்யும் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
துலாம்: உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து மாளவியா யோகத்தை தரப்போகிறார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி சுக்கிரன் 12வது வீட்டில் ஆட்சி பெற்று குடியேறுவதால் சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் விபரீத ராஜயோகம் ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

தனுசு: உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப் போகும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள். தொட்டது துலங்கும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பொன்னான காலம் கைகூடி வரப்போகிறது.
மகரம்: உங்களுடைய ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப் போவதால் மாளவியா யோகம் தேடி வரும் வேலை தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் கோபப்பட்டு பேசி பிரச்சினையை வளர்க்க வேண்டாம். பத்துக்கு அதிபதி பத்தில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
கும்பம்: உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தான அதிபதி ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் உங்க சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பணவரவும் அதிகரிக்கும்.
மீனம்: உங்க ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது விபரீத ராஜயோக அமைப்பாகும். உங்க ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் உங்க ராசி லக்ன அதிபதிக்கு எதிரி. பகையாளி எட்டிற்கு உரியவன் எட்டில் மறையப்போவது விபரீத ராஜயோகம்தான் என்றாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணம், விலை உயர்ந்த பொருட்கள் நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications