சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: தனுசுவில் சுக்கிரன் செவ்வாய்.. தை பிறந்தால் யாருக்கு காதல் மலரும்?
சென்னை: சுக்கிரன் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். வரும் 18ஆம் தேதி தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் செவ்வாய் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு காதல் மலரும்.. வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசியில் செவ்வாய், புதனுடன் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
காதல் நாயகன் சுக்கிரன்: சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி.

மேஷம்: உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் இருந்து சுக்கிரன் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் திருமண சுப காரியம் கைகூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சுக்கிரன் இளம் வயதினருக்கு காதல் மலரும் காலம்.. கணவன் மனைவி இடையே அன்பும் காதலும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைத்தது நடைபெறும். குருவின் பயணமும் சாதகமாக உள்ளது. எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக நீங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் ஆலோசனை செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள். புதிய திட்டங்களை தொடங்க ஏற்ற காலம் இது.
ரிஷபம்: புதனும் சுக்கிரனும் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் உடல் நலக்கோளாறுகள் வரலாம் கவனம் தேவை. செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக இந்த மாதம் பேச வேண்டாம். காதலிப்பவர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வரலாம். விட்டுக்கொடுத்து செல்லாவிட்டால் பிரேக் அப் ஆகிவிடும். சில வாரங்கள் மவுன விரதம் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். இல்லத்தரசிகள், வேலை செய்யும் பெண்கள் எதையும் காதில் போட்டுக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடாதீர்கள்.
மிதுனம்: சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். ஜனவரி 18ஆம் தேதியில் இருந்து உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய் இணைந்து பயணம் செய்யப்போகின்றன. இளம் வயதினர் காதல் விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு காதலில் விழுந்து விட்டு அவதிப்படாதீர்கள். புதிய உறவுகளை தேடாதீர்கள். இருக்கும் உறவுகளை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையேயான உறவுகளில் சிறு சிறு சலசலப்புகள் வரலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணம் சுப காரியம் தொடர்பாக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் சில வாரங்கள் தள்ளிப்போடுவது நல்லது.
கடகம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் புதன், செவ்வாய், சுக்கிரன் உடன் பயணம் செய்யப்போவதால் காதல் விவகாரங்களில் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமும் நிதானமும் அவசியம். சின்ன சின்ன சண்டை வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதை விட அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பது அவசியம். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதால் முழுவதுமாக ஒருவரை நம்பி முடிவு எடுக்காதீர்கள். சில வாரங்களுக்கு கோபங்களை விடுத்து அமைதியை கடைபிடிப்பது நல்லது.
சிம்மம்: சுக்கிரன் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கூடவே புதனும் செவ்வாயும் பயணம் செய்வதால் காதல் விவகாரங்களில் கலவையான மனநிலையில் இருக்கும். திடீர் காதல் உருவாகும். ஆன்மீக மனநிலையில் இருப்பவர்களுக்கு கூட காதல் பூ பூக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கமும் காதல் உணர்வுகளும் அதிகரிக்கும். உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதை விட அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உணவு விசயத்திலும் அதிக கவனம் தேவை. டென்சனை குறைத்து அமைதியான மன நிலைக்கு மாறுங்கள் நல்லதே நடக்கும்.
கன்னி: சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் செவ்வாயுடன் இணையப்போவதால் தடைபட்ட காரியம் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆண்கள் பெண்களுக்கு உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் மருத்துவ செலவுகளுக்கு கடன்கள் ஏற்படும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும்.
துலாம்: ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் வீடான முயற்சி ஸ்தானத்தில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். கையை விட்டு போன பணம் திரும்ப வரும். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும். மகளின் திருமணத்தை சற்றே தள்ளிப்போடுவது நல்லது. காதலில் விழுந்தவர்கள் கவனமாக இருக்கவும் பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவைப்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 2வது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். இளம் வயதினர் காதலில் விழ வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையை கவனமாக தேர்வு செய்வது நல்லது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.
தனுசு: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும்.
மகரம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் கூட்டணி அமைத்து குடியேறப்போவதால் சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சியால் கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர மேலும் நன்மைகள் நடைபெறும்.
கும்பம்: சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போவதால் திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வெள்ளியில் ஓபல் ரத்தினக்கல் பதித்த மோதிரத்தை அணிய நன்மைகள் நடைபெறும்.
மீனம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாயுடன் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தை தருவார். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications