மகரத்தில் சூரியன், புதன், சுக்கிரன்... விருச்சிகத்திற்கு நகரும் செவ்வாய் - 12 ராசிகளுக்கும் பலன்கள்

நான்கு கிரகங்களின் பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. செவ்வாய் கிரகம் விருச்சிகத்திற்கும், சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு பெயர்ச்சியடைகின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சூரியன், புதன் சுக்கிரன் இடம் மாறும் கிரகங்கள்... உங்கள் ராசிக்கு என்ன பலன் ??- வீடியோ

    சென்னை: நவகிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வது இயல்பானதுதான். ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் சூரியன், சுக்கிரன்,புதன் மகர ராசியில் பெயர்ச்சியடைகின்றன. செவ்வாய் கிரகம் தனது வீடான விருச்சிகத்திற்கு இடம் பெயர்கிறது.

    குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல இந்த கிரகங்களில் பெயர்ச்சிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் சின்னச் சின்ன சந்தோசங்கங்கள், மகிழ்ச்சியை அளிக்கும். செவ்வாய் கிரகம் தனது சொந்த வீடான விருச்சிகத்தில் வரும் 17ஆம் தேதி குடியேறப்போகிறது.

    சூரியன் ராஜ கிரகம் மகர மாதத்தில் அமர்கிறது. மகரத்தில் ஏற்கனவே கேது அமர்ந்துள்ளது. சூரியனுடன் இணைந்து இந்த மாதம் சுக்கிரன், புதன் கிரகங்கள் குடித்தனம் நடத்தப் போகின்றன.

    மேஷம்

    மேஷம்

    ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன் புதன் பத்தாம் இடத்திற்கு வருகின்றனர். 13ஆம் தேதி சுக்கிரன் பத்தாமிடத்திற்கு வருவதனால் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும்.
    14ம் தேதி சூரியன் பத்தாமிடத்திற்கு வருவது சிறப்பான அம்சம். தொழில் ஸ்தானத்தில் அரச கிரகமான சூரியன் அமர்வதால் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் நெருப்பிடம் ஜாக்கிரதையாக இருக்கவும், லேசான காயம் உண்டாகும். புதன் 28ஆம் தேதி பத்தாமிடத்திற்க்கு வருவது தொழில் சம்பந்தமான படிப்பில் உற்சாகத்தைக் கொடுக்கும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான மகரத்திற்கு வருகிறார். வீட்டில் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். செவ்வாய் ஏழாம் இடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். வீடு, மனை வாங்க முயற்சி செய்யலாம். புதன் 28ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருவது உயர் கல்வியில் மேன்மை நிலையைக் கொடுக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும்.

    மிதுனம்

    மிதுனம்

    சூரியன் எட்டாமிடத்திற்கு வருகிறார் ஆபிசில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்ந்து போக வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும் புதன் 28ஆம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது தாய் மாமனின் செயல்கள் சங்கடத்தைக் கொடுக்கும். சுக்கிரன் இம்மாதம் எட்டாமிடத்திற்கு வருவது விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம்.

    கடகம்

    கடகம்

    சுக்கிரன் ஏழாமிடத்திற்கு வருவது மனைவியின் உதவி கிடைக்கும். சூரியன் ஏழாமிடத்திற்கு வருகிறார் வேலை காரணமாக நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 17ஆம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் கணிதத்தில் புலமை உண்டாகும். 28ஆம் தேதி முதல் புதன் ஏழாமிடத்திற்கு வருவதால் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இம்மாதம் ஏழாமிடத்திற்கு வருவதால் மனைவியின் உதவி கிடைக்கும்

    சிம்மம்

    சிம்மம்

    சூரியன் ஆறாமிடத்திற்கு வருகிறார் எதிரிகளை வெல்லும் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் இம்மாதம் 17ஆம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள் புதன் 28ஆம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது தாய் மாமனுடன் சச்சரவை உண்டாக்கும். சுக்கிரன் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது நல்லதல்ல பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

    கன்னி

    கன்னி

    சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஏற்கனவே கடன் கொடுத்த பணம் வசூலாகும். செவ்வாய் 17ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் அண்ணன், தம்பிக்கள் உதவி செய்வார்கள். பேசாமல் இருந்தவர்கள் கூட பேசுவார்கள். புதன் 28ஆம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவதால் பங்குச்சந்தை வணிகங்களில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு வருவதால் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

    துலாம்

    துலாம்

    சூரியன் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் ஏற்கனவே அரசாங்க வாகன யோகம் உண்டாகும். செவ்வாய் இம்மாதம் 17ஆம் தேதி இரண்டாம் இடத்திற்கு வருகிறார் மருத்துவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
    புதன் நான்காமிடத்திற்கு வருவது யோகமானது. தை மாதம் புதிதாக வீடு வாங்கலாம். சுக்கிரன் நான்காமிடத்திற்கு வருவது உறவினர் புதிதாக வாகனம் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    சூரியன் இம்மாதம் 14ஆம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் வீட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு சிக்கல்கள் ஏற்படும். மகன், மகள் வீடுகளுக்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுக்கலாம். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் புதன் 28ஆம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது புத்தியில் சஞ்சலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் 13ஆம் தேதி மூன்றாமிடத்திற்கு அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலையை உண்டாகும்

    தனுசு

    தனுசு

    சுக்கிரன் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வருமானம் அதிகரிக்கும் பொன்னகைகளை வாங்குவீர்கள்.
    சூரியன் தை முதல்நாள் இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்கம் மூலம் வர வேண்டிய பணம் கைக்கு வரும். செவ்வாய் 17ம் தேதி ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வாங்கும் வகையில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் 28ஆம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும்.

    மகரம்

    மகரம்

    சூரியன் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் 17ம் தேதி ஜென்ம ராசியான விருச்சிகத்திற்கு வருகிறார். உங்கள் ராசிக்கு இது பதினொன்றாம் இடமாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
    புதன் 28ஆம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சுக்கிரன் 13ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

    கும்பம்

    கும்பம்

    சூரியன் 14ஆம் தேதி முதல் பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் உத்தியோகம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். செவ்வாய் 17ம் தேதி முதல் பத்தாமிடத்திற்கு வருகிறார் நிலம் வீடு வகை தொழில் நிலை மேன்மையடையும். புதன் 28ம் தேதி முதல் பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும்.சுக்கிரன் 13ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது விரைய ஸ்தானம் என்றாலும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

    மீனம்

    மீனம்

    சூரியன் 14ஆம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். செவ்வாய் 17ஆம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பூர்வீக நிலம் வீடு வகையில் பங்கு கிடைக்கும் புதன் 28ஆம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன்13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது சுகபோகமானப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+