Solar Eclipse 2023: சூரிய கிரகணம்..6 ராசிக்காரர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் கிரகங்கள்
சென்னை: சித்திரை மாதம் 7ஆம் தேதி வியாழக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகண நாளில் சர்வார்த்த சித்தி யோகம், புதாதித்ய யோகம், ஹன்ஸ் யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்களும் உருவாகின்றன. இந்த யோகங்களில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் நிகழப்போகின்றன. சூரிய கிரகணம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடபோகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: அசுவினி நட்சத்திரத்தில் ராகு உடன் சூரியன் இணைந்து கிரகணம் நிகழ்கிறது. மேஷ ராசியில் சூரியன், புதன், சந்தின், ராகு கிரகங்கள் இணைந்திருப்பதால் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களையும் மிகப்பெரிய திருப்பங்களையும் தரப்போகிறது. சூரிய கிரகணம் நிகழும் நாள் அற்புதமான நாள். இந்த நாளில் பூஜை அறையில் அமர்ந்து நாம் செய்யும் வேண்டுதல்கள் பிராத்தனைகள் பலிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: லாப ஸ்தானமான 11வது வீட்டில் நிகழும் சூரிய கிரகணம் அற்புதமான யோகத்தை தரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். பணியிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை, பதவி உயர்வு வரும். கடனாக கொடுத்து மாட்டிக்கொண்ட பணம் திரும்பக் கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் நடைபெறும்.
கடகம்: தொழில் ஸ்தானமான 10வது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த நாளில் உருவாகும் சுப யோகங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பண வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது இந்த சூரிய கிரகணம்.

சிம்மம்: சூரியன் உங்கள் ராசிநாதன். ராகு உடன் இணைந்துள்ளார் சூரியன். சுப யோகங்கள் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. சூரிய கிரகணம் பலன்களைத் தரும். உங்களுடைய காதல் வாழ்க்கையில் இனிய நினைவுகள் அலைமோதும். தொழிலில் வியாபாரம் பெருகும். வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் மனம் ஈடுபடும். நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். உங்களின் ஆற்றல் அதிகரித்தும்.
துலாம்: களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. எதிரிகள், வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் முன்னாள் தம்பதிகள் போன்ற குறிப்பிடத்தக்கவர்களின் வழியில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. குடும்ப உறவுகளுக்குள் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். இந்த சூரிய கிரகணம் மன அமைதியையும் நிம்மதியையும் தரப்போகிறது.

மகரம்: சூரிய கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நிகழும் சூரிய கிரகணம் புதிய சொத்து சேர்க்கையை ஏற்படுத்தும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சொந்த இடத்தை விட்டு வீட்டை விட்டு வெளியே செல்வீர்கள். உங்களின் புதிய வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.












Click it and Unblock the Notifications