Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் பண மழை.. ராஜயோகம்தான்.. தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்கு என்ன நடக்கும்? பலன்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 14ல் தமிழ் குரோதி ஆண்டு பிறக்கிறது. இந்த புதிய ஆண்டில் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில் கிரகங்களின் நிலைகளை பொருத்தும் உங்கள் ராசி பலன்கள் மாறும். புத்தாண்டும் இதில் முக்கியமான ஒன்றாகும்.

Tamil New Year Palan 2024 Horoscope for Kadaga Rashi that you should know

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.

இதில் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

பொறுப்பாக இருங்கள்: எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருங்கள். எதையும் யோசித்து செய்யுங்கள். ஒவ்வொரு படியையும் பார்த்து பார்த்து வையுங்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடங்கள், படிக்கும் இடங்களில் பொறுப்பாக இருங்கள். ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக வையுங்கள். அலுவலகங்களில் சில சமயங்களில் உங்களுக்கு அதீத பிரஷர் வரலாம். அதனால் நீங்கள் தவறு கூட செய்யலாம், இதனை தவிர்க்க மிகவும் பொறுப்பாக செயல்படுங்கள்.

பணம் வரும்: நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் பணம். முக்கியமாக இந்த புதிய நிதி ஆண்டில் வருமானம் புதிய உச்சத்தை தொடும். பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யவும். நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

கெட்ட எண்ணம் வேண்டாம்: உங்களுக்கு அதிகமாக கெட்ட எண்ணம் பிறக்கலாம். அதனால் கெட்ட எண்ணம் வந்தால் உடனே மறந்துவிடுங்கள். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டாம். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே. யோசித்து பேசுங்கள்.

ஆரோக்கியம் சரியாகும்: இந்த புத்தாண்டு உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்யும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.

திருமண உறவில் கவனம்; திருமண உறவில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு பெண், ஆண் பார்க்க வேண்டாம். மன வாழ்க்கையை யோசித்து முடிவு எடுக்கவும். முக்கியமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திருமண உறவில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும்.

கடன் வேண்டாம்: உங்களுக்கு கடன் வாங்கும் எண்ணம் அதிகம் வரும். அதை மட்டும் செய்து விடாதீர்கள். அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+