வீடு, வேலை, இடம்.. இந்த வருஷம் எல்லாமே மாற போகுது.. தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்கு என்ன நடக்கும்?
சென்னை; ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். பல மாற்றங்களை ஏற்படுத்த போகும் இந்த வருடம் உங்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கும்.. என்னவெல்லாம் கெடுக்கும் என்று பார்க்கலாம்.
தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.

இதில் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
மாற்றங்கள் வரக்கூடிய வருடம். இந்த வருடம் உங்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட போகிறது.
1. நீங்கள் பார்த்த வேலையில் மாற்றம் ஏற்படும். நீங்கள் பணிமாறுதல் செய்ய விரும்பினால் அது ஏற்படும். இடமாறுதல் செய்ய விரும்பினால் அது மாறும் .
2. நீங்கள் வீடு மாற வேண்டும், வாடகையை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அதுவும் நடக்கும்.
3. வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு அதுவும் நடக்கும். கல்வி ரீதியாக மாற்றம் பெற வேண்டி வேறு கல்விக்கூடம் செல்ல விரும்பினால் அதுவும் நடக்கும்.
4. திருமண வாழ்க்கையும் அமையும். இதனால் உங்களுக்கு வாழ்க்கை சிங்கிள் லைபில் இருந்து கல்யாண் வாழ்க்கையை நோக்கி இந்த வருடம் செல்லும்.
அலட்சியம் வேண்டாம்; எல்லா மாற்றமும் வர கூடிய இந்த வருஷத்தில் கொஞ்சமும் அலட்சியமாக இருக்காதீர்கள். எதையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட இரண்டுக்கு மூன்று முறை சோதனை செய்து பார்த்துவிட்டு மெசேஜ் அனுப்புங்கள். இது எடுத்துக்காட்டுதான். இப்படி எல்லா விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம் சரியாகும்: உங்களின் ஆரோக்கியம் சரியாகும். உடல் ரீதியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். இதுவரை இருந்த கிட்னி பிரச்சனைகள் சரியாகும். வயிற்று பிரச்சனைகள் சரியாகும். கால் வலி நீண்ட காலம் இருந்த போதிலும் இப்போது சரியாகிவிடும்.
சேர்க்கையில் கவனம் வேண்டும்: காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்றன பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். உங்களின் சேர்க்கையில் கவனம் வேண்டும். யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். கூடாது சேர்க்கை பல பிரச்சனைகளை, ஆபத்துகளை ஏற்படுத்தும்.
குடும்பத்தினரிடம் அன்பாக இருங்கள்: நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். இந்த காலத்தில் குடும்பத்திரிடம் அன்பாக இருங்கள். அவர்களிடம் சண்டை போட வேண்டாம். அம்மா அப்பாவிடம் அன்பாக இருங்கள். மனைவியிடம் கோபம் கொள்ள வேண்டாம் .
ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு எல்லாம் மாறும் என்பதால் மாற்றம் தரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபடவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications