Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத ராசி பலன்கள் 2020 : மேஷம் முதல் கடகம் வரை எப்படி இருக்கும் தெரியுமா

தை மாதம் மகர மாதம். சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். தனுசு ராசியில் இருந்து சனி மகர ராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதம் சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார்.
உத்தராயண புண்ணிய காலம் தை முதல் தேதி முதல் தொடங்குகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகியஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் ஆகும். இந்த மாதங்களில் நிறைய சுப காரியங்களை செய்யலாம். ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி. இந்த நாளில்தான் சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம். இந்தநாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட ஆரோக்கியம் அதிகமாகும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். பகைவர்களை வெல்லும் சக்தி கிடைக்கும்.
கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து மேஷம் முதல் கடகம் வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மிதுன ராசியில் ராகு, தனுசு ராசியில் சனி, கேது, குரு, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், கும்பத்தில் சுக்கிரன்,என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால், தை பத்தாம் தேதி சனிபகவான் மகரம் ராசிக்கு இடம் மாறுகிறார், 16ஆம் தேதி கும்பத்திற்கு இடம்மாறுகிறார். தை 19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.

தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து மேஷம் முதல் கடகம் வரை 4 ராசிக்காரர்களுக்கும் வருமானம் எப்படி இருக்கும், வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் திருமணம் கை கூடி வருமா? சுப நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

தை மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். கம்பீரமாக வலம் வருவீர்கள். நிறைய நன்மைகள் நடைபெறும். மகர சங்கராந்தி உங்க ராசிக்கு நன்மை செய்யக்கூடிய சூரியன் மேஷ ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. பத்தாம் வீட்டிற்கு சனி பெயர்ச்சியாகி வந்து சூரியனுடன் இணைவார். அரசு தேர்வுகள் எழுதலாம். ராசி அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் இருக்கிறார். புதனின் சஞ்சாரம் ஒன்பதாம் இடம் தொடங்கி லாப ஸ்தானம் வரை சஞ்சரிக்கிறார், நிறைய லாபத்தை தருவார். குரு உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் கேது உடன் இணைந்திருக்கிறார், குரு பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் அதிகமாகும். உங்களுக்கு சின்ன பயம் இருந்தாலும் தைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு அற்புதமான மாதம் நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக போங்க நல்லதே நடக்கும். இந்த மாதம் இடம் மாற்றம் எதுவும் வேண்டாம். புதிய தொழில் செய்வதில் கவனமாக இருங்க மாசி மாதம் வரை காத்திருங்கள். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் அதிகமாகும். சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் அது உங்களின் பினைப்பை அதிகமாக்கும். பேச்சில் கவனமாக இருங்க. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேண்டாம். இன்பச்சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். பாதிப்புகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

தை மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தை பிறந்தா வழி பிறக்கும். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு மகரம். இது மகர மாதம். சூரியன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அஷ்டமத்து சனியும் முடிந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து சூரியனுடன் சஞ்சரிக்கிறார். சூரியன், சந்திரன், செவ்வாயின் நட்சத்திரங்களான கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் இருக்கின்றன. ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைபவர். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் மனோதிடம் மிக்கவர்கள். அஷ்டம ஸ்தானத்தில் குரு, கேது, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில நாட்களில் இந்த நிலை மாறும். குரு கேது தவிர, சனி இடம் மாறுகிறார். மாத பிற்பகுதியில் ஒன்பதாம் இடம் வலுவடைகிறது. மகரம் உங்களுக்கு நன்மை செய்யக்கூடிய ராசி. உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. மாணவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். காரணம் ஒன்பதாம் வீட்டில் சூரியன், புதனோடு பாக்ய ஸ்தானத்தில் புத ஆதிபத்ய யோகம் பெற்றிருக்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. திருமணம் நடைபெறும், புத்திரபாக்கியம் கிடைக்கும் அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க நல்லதே நடக்கும். புதிய தொழில் எதையும் இப்போது ஆரம்பிக்க வேண்டாம் சனி மாறட்டும் நல்லதே நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

தை மாதம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நீங்க புத்திசாலிகள், உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நல்ல வேலைவாய்ப்பபு கிடைக்கும். ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அது உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும். குரு பலன் முழுமையாக இருப்பதால் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் பணப்புழக்கம் அதிகமாகும். நீங்க சந்திராஷ்டம நாட்களில் கவனமாக இருங்க. யார் கூடவும் விவாதம் பண்ணாதீங்க. கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. திருவெண்காடு புதன்பகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும். மதுரை மீனாட்சி அம்மனை வணங்குங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏழாம் வீட்டில் சூரியன், புதன், எட்டாம் வீட்டில் சுக்கிரன், 12ஆம் வீட்டில் ராகு ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் கேது, குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் வீட்டில் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்க பேச்சில கவனமாக இருக்கணும். பெண்கள் விசயத்தில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க கண்மூடித்தனமான நட்புகளை தவிர்த்து விடுங்கள். மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். யாருக்காகவும் கடன் வாங்காதீங்க அது திரும்ப வராது. ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதிக்காக சுற்றுலா கிளம்புங்கள். பயணங்களில் வெற்றி கிடைக்கும். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பெண்களுக்கு இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனது இனி பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+