தை மாத ராசி பலன்கள் 2020 : சிம்மம்,கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
தை மாதம் மகர மாதம். சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். தனுசு ராசியில் இருந்து சனி மகர ராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேது, கு
சென்னை:தை மாதம் சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார்.
உத்தராயண புண்ணிய காலம் தை முதல் தேதி முதல் தொடங்குகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகியஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் ஆகும். இந்த மாதங்களில் நிறைய சுப காரியங்களை செய்யலாம். ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி. இந்த நாளில்தான் சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம். இந்தநாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட ஆரோக்கியம் அதிகமாகும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். பகைவர்களை வெல்லும் சக்தி கிடைக்கும்.
கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மிதுன ராசியில் ராகு, தனுசு ராசியில் சனி, கேது, குரு, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், கும்பத்தில் சுக்கிரன்,என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால், தை பத்தாம் தேதி சனிபகவான் மகரம் ராசிக்கு இடம் மாறுகிறார், 16ஆம் தேதி கும்பத்திற்கு இடம்மாறுகிறார். தை 19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.
தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கும் பண வருமானம் எப்படி இருக்கும், வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் அரசு வேலை கிடைக்குமா? இடமாற்றம் பதவி உயர்வு வருமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகும் திருமணம் கை கூடி வருமா? சுப நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு இந்த ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

நல்லகாலம் பிறந்து விட்டது
தை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் ஆறாம் வீட்டிலும் ஐந்தாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தாம் தேதிக்கு மேல் சனி ஆறாம் வீட்டிற்கு சென்று சூரியனோடு இணைகிறார். புதன் 16ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தசாபுத்தி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்த்து அதற்கேற்ப பலன்களை பொருத்தி பார்க்கலாம். நல்ல நேரம் உங்களுக்கு ஆரம்பமாகிவிட்டது. படிப்பில் உயர்கல்வி யோகம், வெளிநாடு கல்வியோகம் வந்து விட்டது.

வெற்றியான மாதம்
மாணவர்களுக்கு புத்திசாலித்தனம் மேலோங்கும் தேர்வுகளை உற்சாகமாக எதிர்கொள்வீர்கள். களத்திர சுக்கிரன் உற்சாகத்தை கொடுப்பார். திருமணம் ஆகாத சிம்மராசிக்காரர்களுக்கு உற்சாகம் மேம்படும் கல்யாணம் யோகம் கைகூடி வரப்போகிறது. தட்டிப்போன வரன்கள் கூட உங்களை தேடி வரும். புத்திரயோகம் வந்து விட்டது. வீட்டில் குவா குவா சத்தம் கேட்கப்போகிறது. கணவன் மனைவி உறவில் உற்சாகம் ஏற்படும். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு வேலை உங்களை தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மைகள் நாடி வரப்போகிறது விமானத்தில் பறக்கப்போகிறீர்கள்.

பணம் கொட்டும்
இதுநாள் வரை பணியில் இருந்த பளு நீங்கப்போகிறது. அலுவலகத்தில் உங்களை கொண்டாடப்போகிறார்கள். கடன் வாங்க நிங்க இந்த மாதத்தில் முயற்சி செய்யாதீங்க இருந்த கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். அந்த அளவிற்கு வருமானம் அதிகமாகும். வம்பு வழக்குகள் தீரும் உங்களுக்கு சாதகமானதாகவே முடியும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தை பிறந்து வழி பிறந்து விட்டது.
இருக்கிறதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படாதீங்க, புதிய தொழில் ஆரம்பிக்காதீங்க நல்லதில்லை.

கவலைகள் மாறும்
தை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் ஐந்தாம் வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். ஆறாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தாம் தேதிக்கு மேல் சனி ஆறாம் வீட்டிற்கு சென்று சூரியனோடு இணைகிறார். புதன் 16ஆம் தேதி ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் உங்களுக்கு வழி பிறந்து விட்டது நன்மைகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வி யோகம் மேன்மையை தரும். படிப்பில் அக்கறையும் கவனமும் தேவை. திறமையும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். இந்த மாதத்தில் கவலைகள் மாறும்

நன்மைகள் நடக்கும்
காதல் வலையில் விழுந்து விடாதீர்கள் அது சிக்கலில் கொண்டு போய் விடும் அப்புறம் அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். திருமண முயற்சிகளை இந்த மாதம் செய்ய வேண்டாம். காதல் பிரச்சினையாகி பிரிவினையாகிவிடும். வம்பு வழக்குகளில் கவனமாக இருங்க. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். தோஷங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது வீட்டில் ஆன்மீக அதிர்வுகள் அதிகரிக்கும். தினசரி நன்மைகளே அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி முடிந்து விட்டது எதிர்பாராத நன்மைகள் நடக்கும் அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தை பூச திருநாளில் முருகனை சரணடையுங்கள் நன்மைகள் அதிகம் நடக்கும். தேரோட்ட தரிசனம் பாருங்க நல்லதே அதிகம் நடக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications