தை மாத ராசி பலன் 2023: சூரியன் தரும் பதவி யோகம்.. பணமழையில் நனையப்போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் சுயசாரம் பெற்று வர்க்கோத்தம பலமடைந்து மகர ராசியில் பிரகாசிப்பதால் புதிய உயிர்கள் உற்பத்தியாகின்ற மாதமாகவும் நம் உடம்பில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்ற மாதமாகவும் தை மாதம் விளங்குகிறது. இந்த மாதத்தில் மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் செவ்வாய் வக்கிரமடைந்து பின்னோக்கி வந்திருக்கிறார். புதன் 4 ஆம் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். 24 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். மீன ராசியில் குரு இருக்கிறார். விருச்சிகத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் 8 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். தை 3 ஜனவரி 17ஆம் தேதி சனி கும்ப ராசிக்கு செல்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார்.
நவ கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் யாருக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டமும் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
இந்த மாதம் நீங்கள் சூப்பரான பலன்களை அள்ள போகிறீங்க. தைரியமாக தொழிலில் முதலீடு பண்ணுங்க. மடைதிறந்த வெள்ளம் போல் லாபம் வந்து சேருமுங்க. காதல் கத்தரிக்காயின்னு மனதை அலைபாய விடாதீங்க. ஏதாவது சிக்கலில் மாட்டினா கம்பி எண்ண வேண்டிய கட்டாயம் வருமுங்க. கூட இருந்து உங்களுடைய குரல்வளையை கடிக்க நினைக்கிற உறவுக்காரங்களை ஒதுக்கி தள்ளுங்க. அடுத்தவர் விஷயத்துல தலையிடாதீங்க. உங்க மேல எஃப் ஐ ஆர் விழுகிறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாங்கிற நினைப்பை ஒத்தி வையுங்க. திடீர் தன யோகம் உண்டுங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
தகப்பனார மருத்துவமனையில் சேர்த்து அல்லல் பட போறீங்க. பங்கு பரிவர்த்தனை விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையாக இருங்க. முதலுக்கு மோசம் வரக்கூடிய நிலை உண்டுங்க. பணம் நகைகளை வீட்டில வைக்காதீங்க. மீறி பண்ணுனீங்கன்னா திருடர்களுக்கு தான் யோகமுங்க. கூட்டுத் தொழில் உங்க நல்ல உறவுக்கு வேட்டு வைக்கும்ங்க. இழுபறியா பேச்சுவார்த்தையில் இருந்த திருமணத்த நடத்தி வைப்பீங்க. கோவிச்சுக்கிட்டு தாய் வீட்டுக்கு போன மனைவியை கெஞ்சி கூட்டி வருவீங்க. பிள்ளைகள் விஷயத்துல கண்காணிப்பா இருங்க. இல்லைன்னா உங்கள கஷ்டப்படுத்தாமலேயே கல்யாணம் வரைக்கும் போயிருவாங்க. அரசாங்க கடன்கள் தாமதிக்காமல் கட்டுங்க. இல்லைன்னா வீட்டை ஏலத்துக்கு கொண்டு வருவாங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... வேலைக்குப் போற இடத்துல ரொம்ப கட்டுப்பாடாக நடக்கணும்ங்க. தேவையில்லாத பழக்கங்களை ஏற்படுத்துனா அவமானங்கள் அடுக்கடுக்க வருமுங்க. குடிக்கிற பழக்கம் குடும்பத்துக்கு ஆகாதுங்க. அப்புறம் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு நடுத்தெருவுல நிப்பீங்க. வியாபாரம் ஓஹோன்னு நடக்குமுங்க. பழைய கடன்களை அடைப்பீங்க. பஸ்ஸில் போகும்போது கூட பக்குவமா நடந்துக்குங்க. சில்மிஷம் பண்ணினா முதுகுல டின்னு கட்டிருவாங்க. உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியமுங்க. அலட்சியமா விட்டீங்கன்னா அறுவை சிகிச்சையில போய் நிக்குமுங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
மனைவி பிள்ளைங்கள மகிழ்ச்சிப்படுத்த ஆடம்பரமாக செலவு பண்ணுவீங்க. அதுக்காக அகலக்கால் வெச்சீங்கன்னா இருக்கிற வீட்டை விக்கக்கூடிய நிலை வருமுங்க. சிலருக்கு கனவுல பாம்புகள் வந்து பயமுறுத்துமுங்க. ஏதாவது குலதெய்வ நேர்த்திக்கடனோ கோயிலுக்கு வேண்டுதலோ இருந்தா நிறைவேற்றுங்க. நம்பி யாருக்கும் காசு கொடுக்காதீங்க. அதனால பணத்தை இழக்கிறது மட்டும் இல்லாம கோர்ட்டுக்கு அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படுமுங்க. வாகனங்களில் போகும் போது சாக்கிரதைங்க. எதுக்க வர்ற வண்டியில மோதி கை, கால் உடைய வாய்ப்பு இருக்குங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
வியாபாரத்திற்கு இருந்த எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீங்க. பணத்தை புதிய தொழிலில் முதலீடு செஞ்சு மத்தவங்க மூக்குல விரலை வைக்கிற மாதிரி நிமிர்ந்து நிப்பீங்க. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை விருத்தி செய்வீங்க. உடம்புக்கு ஏதாவது பிரச்சனைனா ராத்திரி தூங்க மாட்டீங்க. நல்ல மருத்துவரை பார்த்து முறையாக சோதனை பண்ணி அதற்கு வேண்டிய சிகிச்சை எடுத்துக்கோங்க. மனசு கவலைப்பட்டால் உடம்பு கெட்டுப்போகுமுங்க. ராத்திரி பயணத்தை இந்த மாசம் ஒதுக்கி வையுங்க. கத்திய காமிச்சு கையில இருக்க பணத்தை புடுங்கிட்டு போயிடுவாங்க. காதலிச்சு வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு ஜோடிக்கு உங்க தலைமையில் கல்யாணம் பண்ணி வைப்பீங்க.
காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
அடுத்த வீட்டுக்காரங்களோட வம்பு வழக்கு வச்சுக்காதீங்க. அவங்க பாட்டுல போலீஸ் ஸ்டேஷன்ல புகாரை கொடுத்து நிம்மதியை கெடுத்துருவாங்க. நீங்க எதிர்பார்த்து போற சில காரியங்கள் தடங்கலா முடியுமுங்க. இடம் வாங்கி விற்கும் வேலையில எச்சரிக்கையாக இருங்க. போலியான பத்திரத்தை காட்டி உங்களை ஏமாளி ஆக்குற நிலைக்கு ஆளாகாதிங்க. வியாபாரம் சுமாராக நடக்குமுங்க. இழுபறியாய் இருந்த கல்யாண பேச்சை முடிவுக்கு கொண்டு வருவீங்க. கர்ம வினையால தாயாருக்கு இருந்த நோய் கொஞ்சம் கொஞ்சமா விலகுமுங்க. விவசாய தொழில்ல செலவு அதிகமாக வந்து சிரமப்படுத்துமுங்க. பூர்வீக சொத்து பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்குமுங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications