தை மாத ராசி பலன் 2024: மகர ராசியில் கிரகங்கள் கூட்டணி.. கோடி கோடியாக தேடி வரும் செல்வம்
சென்னை: தமிழ் மாதங்களில் பத்தாவது மாதம் தை மாதம். மகர ராசிக்குள் சூரியன் நுழைவதால் மகரமாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தை மாதத்தில் சனியின் வீடான மகர ராசியில் செவ்வாய், புதன் கூட்டணி சேருகிறது. கிரகங்களின் கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு : உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் லாபத்தைக் கொடுக்கும். கோபமான பேச்சுக்களை குறைக்கவும். சண்டை சச்சரவு வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாதம் முழுவதும் புத்தி கூர்மை அதிகரிக்கும். பேசியே காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் கூடும் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் மாதம் தை மாதம்.

மகரம் : சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால் மனக்கசப்புகள் ஏற்படும். அப்பாவுக்கான மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் புதிதாக வீடு நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் பிரயாணம் உண்டாகும். செவ்வாய் பகவான் உச்சம் பெற்று பயணம் செய்யும் நேரத்தில் ருசக யோகம் உருவாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். பெண்கள் பொன் நகைகள் வாங்குவீர்கள். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியை தரும்.
கும்பம் : சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் இந்த மாதத்தில் வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் லாப வீட்டில் இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 22ஆம் தேதி 12ஆம் வீட்டிற்கு வரப்போவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். 24ம் தேதி முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்.
வியாபாரம் தொழில் நிலை சிறப்படையும். ஆன்மீக பயணத்திற்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும்.
மீனம் : உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சூரியன் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை கட்டுப்படுத்தவும். பண வருமானம் அதிகரிக்கும். தொழில் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் செய்யும் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் மாதமாக தை மாதம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications