தை மாத ராசி பலன் 2024: சனி வீட்டில் உருவாகும் புது கூட்டணி.. பண மழையில் நனையும் ராசிக்காரர்கள்
சென்னை: தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் தை மாதம் பத்தாவது மாதம். மகர ராசிக்குள் சூரியன் நுழைவதால் மகரமாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தை மாதத்தில் சனியின் வீடான மகர ராசியில் புது கூட்டணி உருவாகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் : உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று அமரப்போகிறார் வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரியன், செவ்வாயுடன் பத்தாம் இடத்திற்கு புதன் வருவதால் படித்த படிப்புக்கு தக்கவாறு வேலை கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். சூரியனை வணங்க பலன்கள் பல மடங்காக கிடைக்கும்.

ரிஷபம் : சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும், தாய் தந்தையரின் ஆசீர்வாதம் கிடைக்கும். செவ்வாய் உச்சம் பெற்று புதன் சூரியனுடன் இணைவதால் சொத்து வாங்கலாம். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். மனைவிக்காக செய்யும் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் பெண்களால் நன்மை உண்டாகும் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் : சூரியன் எட்டாமிடத்தில் செவ்வாய் புதனுடன் பயணம் செய்யப்போவதால் பயணங்களில் நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் சிலர் மனதை சங்கடப்படுத்துவார்கள். நெருப்பு விசயங்களில் கவனம் தேவை. கூர்மையான பொருட்களை கையாளும் போது நிதானம் அவசியம். பங்குச்சந்தை முதலீடுகள் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். உங்களை விட பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் தவிர்க்கவும். மனைவியிடம் சண்டையிட வேண்டாம்.
கடகம் : சூரியன் ஏழாமிடத்தில் உங்கள் ராசிக்கு நேராக சஞ்சரிப்பதால் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். செவ்வாய் உச்சம் பெற்று உங்கள் ராசியை பார்க்கிறார். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது.
வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்படையும். வேலை தொழில் விஷயமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தை மாதம் முழுவதும் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் சுப செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் மன அமைதியைத் கொடுக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications