Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத ராசி பலன் 2024: மகரத்தில் சூரியன் பெயர்ச்சி.. புது கூட்டணியால் யாருக்கெல்லாம் யோகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. செவ்வாய் தனுசு ராசியில் நிற்கிறார். 21 ஆம் தேதி மகர ராசிக்கு மாறுகிறார். புதன் தனுசு ராசியில் நிற்கிறார். 13 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் விருச்சிக ராசியில் இருக்கிறார். ஐந்தாம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மீன ராசியில் இருக்கிறார். கேது கன்னி ராசியில் இருக்கிறார் இந்த கிரகங்களின் பயணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 17 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
தொழிலை விரிவுபடுத்த புதிய பாதை உங்கள் கண்ணுக்கு தெரியுதுங்க. கிடைக்கின்ற வாய்ப்பை தவற விடாதீங்க. புதிய வீடு கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவீங்க. வியாபாரத்தில் கிடைத்த லாபத்தால் மனைவிக்கு நகை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீங்க. வெளிநாட்டில் இருந்து தொழிலுக்கு தேவையான நல்ல செய்தி கிடைக்குமுங்க. உறவினர்கள் மத்தியில் உங்களின் செயல்பாட்டால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்குமுங்க. கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்பு கிடைத்து திறமையை வெளிப்படுத்துவீங்க. வழக்கறிஞர்கள், மருத்துவர்களுக்கு இது யோகமான மாதமாக அமையுமுங்க. சகோதரியின் கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்துவீங்க.
திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

Thai matha Rasi palan 2024: Thai month rasi Palan prediction for Mesham to Meenam

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
நீண்ட காலமாக உங்களை சிரமப்படுத்திய நோய் தொந்தரவு விலகிப் போகுமுங்க. நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியுமுங்க. காதலியின் மனதை குளிர்விக்க கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீங்க. தாய் தந்தையரின் ஆசையை நிறைவேற்றி வைக்க புனித யாத்திரைக்கு அனுப்பி வைப்பீங்க. இடம் வாங்கி விற்கும் தொழிலில் நல்ல லாபம் அடைவீங்க. அரசியலில் முனைப்போடு செயல்பட்டு தலைவர்களின் பாராட்டை பெறுவீங்க. அரசு ஊழியர்கள் வேலையில் அக்கறையாக நடந்து புதிய சாதனை படைப்பீங்க. விளையாட்டு துறையில் திறமையை வெளிப்படுத்திய சிலருக்கு அரசு வேலை கிடைக்குமுங்க. மாமனார் வீட்டுக்கும் உங்களுக்கும் இருந்த மனக்கசப்பு மறைந்து புதிய உறவு மலருமுங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த வங்கிக் கடன் சுலபமாக கிடைக்குமுங்க. பிள்ளைகள் விருப்பப்படி கல்வியில் முன்னேற்றமடைய பாடுபடுவீங்க. நெருங்கிய நண்பருக்கு பண உதவி செய்து அவருடைய சிக்கல் சிரமங்களில் இருந்து விடுபட பெரும் பங்களிப்பு செய்வீங்க. முழங்கால் வலியால் அவதிப்பட்ட தாயாரின் நோய்க்காக சிறப்பு மருத்துவரை பார்த்து சிகிச்சை மேற்கொள்ள செய்வீங்க. தொழிலில் புதிய நுணுக்கத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மத்தியில் உயர்ந்து நிற்பீங்க. யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்து போக மாட்டீங்க. வெளியூர் பயணங்கள் மூலமாக புதிய ஆர்டர்களை பெற்று வியாபாரத்தை பெருக்குவீங்க.
திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
வாகனங்களை அலட்சியமாக ஓட்டாதீங்க. மோட்டார் சைக்கிளில் போகும்போது ஹெல்மெட் போட மறக்காதீங்க. வியாபாரத்தில் சின்ன சின்ன தொந்தரவுகளை சந்திப்பீங்க. உங்களை வீழ்த்த எதிரிகள் முனைப்போடு செயல்படுவாங்க. அதை எல்லாம் முறியடித்து வெற்றி காண்பதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவீங்க. தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைப்பீங்க. சகோதர சகோதரிகளின் தேவைகளை பூர்த்தி செய்வீங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுவீங்க. அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமுங்க. தனியார் துறை ஊழியர்கள் அக்கறையோடு வேலை பார்த்து வருமானத்தை பெருக்குவீங்க. இரவு நேர பயணங்களில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள மறக்காதீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்ரு என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் நடந்து கொள்வீங்க. வியாபாரப் போட்டியை முறியடிக்க நண்பர்களின் உதவியை நாடுவீங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கையோடு செயல்படுங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்க. கணவன் மனைவிக்கிடையே கசப்பு உருவானாலும் மனம் விட்டுப் பேசி அதை சரிப்படுத்திக்கொள்ள தவறாதீங்க. பிள்ளைகளின் ஆசையை கஷ்டப்பட்டு நிறைவேற்றி வைப்பீங்க. தொழில் துறைகளில் ஏதாவது இடையூறு ஏற்பட்டு மன சஞ்சலத்தை கொண்டுவருமுங்க. சின்ன விஷயத்தை கூட பெரிதாக நினைத்து இரவு தூக்கத்தை தொலைப்பீங்க. சிலர் தூக்க மாத்திரையின் உதவியை நாடுவீங்க.
காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் தூங்க மாட்டீங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் கணிசமான லாபம் பார்ப்பீங்க. வீட்டில் திருமண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிப்பீங்க. குழந்தை பாக்கியம் இல்லாதவங்க முறையாக மருத்துவரை பார்த்து சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்குமுங்க. பட்டப்படிப்பு முடித்து அரசு வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வந்து சேருமுங்க. நீண்ட காலமாக எதிர்பார்த்த அயல்நாட்டு வேலைக்கான அனுமதி கிடைத்து வெளிநாடு செல்வீங்க. நெருங்கிய உறவினரின் இழப்பால் மிகவும் மன வேதனைப்படுவீங்க. அரசியல்வாதிகளின் நட்பால் புதிய கான்ட்ராக்ட் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் இல்லாதவருக்கு கடன் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீங்க.
காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகி உங்களுக்கு உரிய பங்கு கிடைக்குமுங்க. பேசி முடித்த திருமணம் ஏதாவது ஒரு காரணத்தால் நின்று போக வாய்ப்பு இருக்குங்க. மனைவி குழந்தைகள் தவறு செய்தால் கோபத்தை வெளிப்படுத்தி பிரச்சனையை பெரிதாக்காதீங்க. வங்கிக் கடனை அடைக்க சற்று சிரமப்படுவீங்க. அனாவசியமாக செலவு செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீங்க. வெளியூர் பயணங்களில் அறிமுகமில்லாத பெண்களிடம் அதிக நெருக்கம் காட்டாதீங்க. சில நேரங்களில் அதுவே வினையாகி வில்லங்கத்தை கொண்டுவருமுங்க. அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்லி யாராவது பணம் கேட்டால் கொடுக்காதீங்க. பைனான்ஸ் தொழிலில் அதிக லாபம் வருகிறதே என்று குறுக்கு வழியில் இறங்காதீங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
உறவினர்களிடம் இருந்த பிரச்சனையை தீர்க்க விட்டுக் கொடுத்துப் போவீங்க. தொழில் துறைகளில் நிதானமாக நடந்து கொண்டு வருமானத்தை பெருக்குவீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய யுக்திகளை பயன்படுத்துவீங்க. ஏதாவது காரணத்தால் மன நிம்மதி கெட்டு ஆலய வழிபாடு செய்ய புனித யாத்திரை புறப்படுவீங்க. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் மாடு பிடிக்கிறோம் என்று சொல்லி காயப்பட்டு விடாதீங்க. எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்க. ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. வீட்டில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீங்க. மனதுக்கு பிடித்த பெண்ணிடம் விருப்பத்தைச் சொல்லி காதலை வெளிப்படுத்துவீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
ஏதாவது ஒரு நோய் தொந்தரவு உங்களை சிரமப்படுத்திக் கொண்டு இருக்குமுங்க. அதையே நினைத்து கவலைப்படாமல் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்க. நிலம் வாங்கும் போது உரிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள தவறாதீங்க. நெருங்கிய நண்பரே உங்களை ஏமாற்றும் நிலை ஏற்படுமுங்க. அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. எடுத்ததுக்கெல்லாம் கோபமாக பேசி குடும்ப உறவுகளை குழைத்து விடாதீங்க. தங்கைக்கும் அவருடைய கணவருக்கும் இருந்த பிரச்சனையை சமூகமாக பேசி தீர்த்து வைப்பீங்க. சிலருக்கு திடீரென்று வெளிநாடு போகும் வாய்ப்பு உருவாகுமுங்க. பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உறவினர்கள் மத்தியில் அந்தஸ்தை உயர்த்தி கொள்வீங்க.
பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
எண்ணிய காரியங்கள் தடையின்றி நடந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துமுங்க. வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்து கையிருப்பை அதிகப்படுத்துவீங்க. வீட்டில் நடக்கும் சுபச் செலவுகளுக்காக நெருங்கிய நண்பரிடம் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகுமுங்க. வீடு கட்ட ஆரம்பித்து இடையில் ஏற்பட்ட தடங்கலால் நின்று போன கட்டுமானப் பணி நிறைவேறி புதிய வீட்டுக்கு குடி செல்ல ஏற்பாடு செய்வீங்க. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபட்டு கையில் இருக்கும் பணத்தை இழக்காதீங்க. வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் புகழடைவீங்க. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்குமுங்க. பிள்ளைகள் படிப்பில் அக்கறையாக இருந்து பெற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவீங்க. கணவனோடு கோபித்துக் கொண்டு சில பெண்கள் தாய்வீடு வருவதற்கான வாய்ப்பு உண்டுங்க. பெரியவர்கள் விட்டுக் கொடுத்துப் போய் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது நல்லதுங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
நீண்ட காலமாக சேமித்து வைத்த பணத்தை கொண்டு மனைவி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி படுத்துவீங்க. குடும்பத்தின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபடுவீங்க. அதற்குரிய பலனையும் அடைவீங்க. புதிய தொழிலில் அதிக முதலீடு செய்யாதீங்க. வியாபாரத்தில் சுமாரான லாபத்தையே பெறுவீங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அவசரப்படாமல் நிதானமாக நடந்து காரியம் நடத்துவீங்க. உறவினர் ஒருவரின் திருமணத்தை முன்நின்றி நடத்தி எல்லோருடைய பாராட்டையும் பெறுவீங்க. அடுத்தவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீங்க. நீங்கள் ஆசைப்பட்ட காரை வாங்கி வீட்டிற்கு ஓட்டி வருவீங்க. உறவினர்களின் விருந்து நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்து கொள்வீங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகுமுங்க.

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
தளர்ந்த நிலையில் இருக்கும் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர தை மாதம் தாராளமாக வழி செய்யுமுங்க. நீங்கள் எதிர்பார்த்ததை விட தொழிலில் வருமானம் பெருகி கையில் காசு புரளுமுங்க. அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்குமுங்க. தனியார் துறை ஊழியர்களும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்று மனநிம்மதி அடைவீங்க. கட்டுமான துறையில் ஈடுபடும் பொறியியலாளர்கள் அதற்குத் தகுந்தாற்போல் பலனை அடைவீங்க. ஊருக்கு உழைப்பதில் உற்சாகமாக ஈடுபடுவீங்க. நீண்ட காலம் வெளிநாட்டு வேலை பார்த்தவர்கள் சொந்த நாடு திரும்புவீங்க. அதே மாதிரி வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்து விமானத்தில் பறப்பீங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+