கெட்டிமேளம் கொட்டப்போகும் தை மாதம்- முகூர்த்த நாட்கள், விசேச தினங்கள்

தை மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாதம். சுப முகூர்த்த நாட்கள், முக்கிய விஷேசங்கள் நடைபெறும் நாட்களை உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் சூரியன் தனது வட திசை பயணத்தை துவக்கும் உத்தராயண புண்ணியகாலம் பிறக்கிறது. தை மாதம் நிறைய பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாதம். திருமணம் உள்ளிட்ட பல சுப காரியங்கள் நடைபெறும் மாதமாகவும் உள்ளது. தை மாதத்தில் என்னென்ன விசேசங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

Thai month Muhurtham dates 2019

சுப முகூர்த்த நாட்கள்

ஜனவரி 23 புதன்கிழமை திருதியை திதி மகம் நட்சத்திரம் சித்த யோகம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை மகர லக்னம்

ஜனவரி 27 ஞாயிறு கிழமை சப்தமி திதி சித்திரை நட்சத்திரம் சித்த யோகம் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை மகர லக்னம்

பிப்ரவரி 01 வெள்ளிக்கிழமை துவாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் கும்ப லக்னம்

பிப்ரவரி 10 ஞாயிறு கிழமை பஞ்சமி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 7 மணிமுதல் 8 மணிவரை கும்ப லக்னம்

பிப்ரவரி 11 திங்கட்கிழமை சஷ்டி திதி அசுவினி நட்சத்திரம் சித்த யோகம் காலை 6.45 மணி முதல் 7.30 மணிவரை கும்ப லக்னம்

வாஸ்து நாள் ஜனவரி 26 சனிக்கிழமை தை 12ஆம் தேதி காலை 10.52 மணி முதல் 11.28 மணி வரை.

தை மாதம் முக்கிய விஷேச நாட்கள்:

ஜனவரி 15 தை 1, செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை, சூரியபகவானுக்கு பொங்கல் வைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

ஜனவரி 16, தை 2 மாட்டுப்பொங்கல், கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நாள்

ஜனவரி 21, தை 7 தைப்பூசம் முருகனை வழிபடலாம்

பிப்ரவரி 9, வரகுந்த சதுர்த்தி, மல்லிகை பூக்களால் சிவ பூஜை செய்ய காரியத்தடைகள் நீங்கும்.

பிப்ரவரி 10, வசந்த பஞ்சமி இன்று வீட்டில் லட்சுமி பூஜை செய்யலாம். ஆண்டு முழுவதும் வசந்தமாகும்.

பிப்ரவரி 12, ரத சப்தமி இன்று பெருமாள் கோவில்களில் விஷேசம். திருமலை ஏழுமலையான் கோவிலில் திருவிழா. சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி நெய் விளக்கு ஏற்றி சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+