தை மாத ராசி பலன் 2022 : சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்
தை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: சிம்ம பிறந்தவர்களுக்கு முக்கியமான கிரகங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் எதிரிககள் தொல்லை ஒழியும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. தை மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சுக்கிரன், மகர ராசியில் சூரியன், சனி, புதன், கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
கிரகப்பெயர்ச்சிகளைப் பார்த்தால் 1ஆம் தேதி மகர ராசியில் புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. 3ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்கிறார். 16ஆம் தனசு ராசியில் சுக்கிரன் வக்ரம் முடிகிறது. 22ஆம் புதன் வக்ர முடிவுக்கு வருகிறது. 30ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிக்கு நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி, சூரியன், ஏழாம் வீட்டில் குரு பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.

சிம்ம ராசி
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு இது யோகமான கால கட்டம். எதிரிகளின் தொல்லை ஒழியப்போகிறது காரணம் ஆறாம் வீட்டில் உள்ள கிரகங்களின் சேர்க்கைதான். சூரியன், சனி, புதன் சேர்க்கை ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் உங்களின் உடலில் இருந்த நோய்கள் வெளிப்பட்டு நீங்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.

வெற்றிகள் தேடி வரும்
வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் பதவி உயர்வு தேடி வரப்போகிறது. பண வரவு அதிகரிக்கும் வீடு கட்ட கடன் கிடைக்கும். புதிய வீடு கட்டும் முயற்சி பலிதமாகும்.

உடல் ஆரோக்கியம்
புதிய முயற்சிகள் வெற்றி பெற்று பணம் கையில் புரளும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கும். மூத்த குடிமக்களுக்கு சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனம் தேவை.

சூரிய நமஸ்காரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மாத பிற்பகுதியில் அதிக நன்மைகள் நடைபெறும். பணத்தை அதிக அளவில் யாருக்கும் கடனாகத் தர வேண்டாம். வெளியிடங்களில் எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் சிக்கலில் முடியும். செலவை குறைத்துக்கொள்ளுங்கள். குல தெய்வ வழிபாடு அவசியம் செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் ரத சப்தமி நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபடுங்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications