தைப்பூசம் 2020 அன்னதோஷம் நீங்க ஆரோக்கியம் அதிகரிக்க அற்புத ஹோமங்கள்
தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை: திருமணவரம் வேண்டி 2500க்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடைபெற்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 08.02.2020 சனிக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. பங்கேற்க உள்ள ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், தம்பதிகளுக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம்
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர கலாபார்வதி யாகம்
திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம்
குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம் என தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும் என தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அன்னதோஷம் விலகும்
தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு செரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications