சனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள் - எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும்
சென்னை: கணவன் மனைவி சதா சண்டையா? எப்ப பார்த்தாலும் உடம்பு சரியில்லாம போகுதா? பணம் வீட்டிலேயே தங்க மாட்டேங்குதா? கவலைப்படாதீங்க உங்க கஷ்டங்களை போக்கக் கூடியது கருப்பு மஞ்சள். அதென்ன கருப்பு மஞ்சள்னு பார்க்கறீங்களா? இது அற்புதமான தாந்த்ரீக மஞ்சள். மருத்துவகுணம் கொண்ட மகத்துவமான மஞ்சள்.
காளியின் அம்சம் கொண்டது இந்த கருப்பு மஞ்சள். நர்மதா நதிக்கரையிலும் மற்றும் மத்திய பிரதேசத்திலும் வளரக்கூடிய அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. வம்பு வழக்கு, சண்டை சச்சரவுகள் பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் கருப்பு மஞ்சளை உபயோகிக்க ஆரம்பித்தால் சண்டை சச்சரவுகள் தீரும்.
கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்பு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். ஜன வசியம், பணவசியத்திற்கு ஏற்றது கருப்பு மஞ்சள்.

கணவன் மனைவி பிரச்சினை
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி சதா சண்டை சச்சரவுடனே இருப்பார்கள். வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாகத்தான் இருக்கும். இதற்கு பயந்து கொண்டு வீட்டிற்கு கூட வராமல் பீச்சிலும், அலுவலகத்திலும் பொழுதை கழிப்பவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் கருப்பு மஞ்சளை பாக்கெட்டில் வைத்திருந்தால் சண்டை சச்சரவுகள் தீரும். பெண்கள் கருப்பு மஞ்சளை அரைத்து பூசத் தொடங்கினால் முகத்தில் பொலிவு கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

எதிர்மறை சக்திகள் ஓடும்
கருப்பு மஞ்சள் காளி, பைரவர் உபாசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. செய்வினை கோளாறுகளை நீக்கும். எதிர்மறை சக்திகளை ஓட வைக்கும். வெற்றியைத் தேடித்தரும். ஜன வசியம், பணவசியம் செய்யக்கூடியது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த மஞ்சளை பணவசியத்திற்காக உபயோகிக்கின்றனர். நடு விரல் சனியின் அம்சம். அந்த விரலில் இருந்து ஒரு ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்து அந்த ரத்தத்தில் இந்த மஞ்சளை அரைத்து நெற்றியில் பொட்டாக வைத்துச் சென்றால் வராத பணமும் கைக்கு வரும் என்பது நம்பிக்கை.

தோஷம் போக்கும் கருப்பு மஞ்சள்
ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள், ராகுவினால் ஏற்படும் தோஷத்தையும் போக்கக் கூடியது. பணம் வாங்க வேண்டும், லோன் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வெளியில் போனாலும் இதை பாக்கெட்டில் எடுத்து போனால் பணம் கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்கள், ஹேண்ட்பேக், பணப்பெட்டி பீரோவில் வைக்கலாம்.

வெற்றி தேடி வரும்
ஜாதகத்தில் ராகு திசை, குரு திசை நடப்பவர்களுக்கும் கோச்சார ரீதியாக சனி, ராகு, குரு பலவீனமாக இருந்தால் தினசரி கருப்பு மஞ்சளை வைத்து வர பாதிப்புகள் குறையும். நன்மைகள் பெருகும். இமயமலை மற்றும் இந்தோனேசியாவில் இது அதிகம் விளையக்கூடியது. பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. கருமஞ்சள் சிறிதளவு எடுத்து சிவப்பு துணியில் கட்டி கழுத்தில் தாயத்து போல அணிய எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

செய்வினை கோளாறுகள் போகும்
கருப்பு மஞ்சளை ஒன்பது துண்டுகளாக சிறிது சிறிதாக வெட்டி அதை பிரேஸ்லெட் போல கோர்த்து கைகளில் அணிந்து கொள்ளலாம் எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும். பேய் பிசாசுகள் பாதிப்புகள் இருந்தாலும் அந்த பாதிப்புகள் மறைந்து போகும் பணவரவு அதிகரிக்கும் உடல் நல பாதிப்புகள் சரியாகும்.

வேலை கிடைக்கும்
புது வேலைக்கு இன்டர்வியூக்கு செல்பவர்கள் கருப்பு மஞ்சளை நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு சென்றால் அது வெற்றிகரமாக முடியும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கண் திருஷ்டி கோளாறுகள் இருந்தாலும் குணமடையும். தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டாலோ, உடல் நல பாதிப்புகள் வந்தாலோ இந்த கருப்பு மஞ்சள் நஷ்டத்தை போக்கும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications