மேஷ ராசிக்காரங்க விருச்சிக ராசிக்காரங்களோட ஜோடி சேராதீங்க

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. காதலும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன சரியான மனப்பொருத்தம் இருக்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து இதயத்தில் இடம் பிடித்து திருமண பந்தத்தில் நுழைபவர்கள் கூட சில மாதங்களில் குட்பை என்று சொல்லி விட்டு பிரிந்து விடுகிறார்கள். ஏட்டிக்குப் போட்டியாக பேசுவதில் இல்லை வாழ்க்கை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்த வாழ்வதே வாழ்க்கை. எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர வேண்டும் என்று ஜோதிடர் கூறியுள்ளனர். சில ராசிக்காரர்களுடன் சில ராசிக்காரர்கள் சேர்ந்தால் செட் ஆகாது. எந்த ராசிக்காரர்கள் யாருடன் சேர வேண்டும் என்று பார்க்கலாம்.

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது பத்துப்பொருத்தம் பார்ப்பது போல ராசிப்பொருத்தமும் பார்க்க வேண்டும். பஞ்ச பூத தத்துவத்தை உள்ளடக்கிய ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் ஒத்துப்போவார்கள். சில ராசிக்காரர்கள் ஒத்துப்போக மாட்டார்கள்.
எந்த ராசிக்காரர்களுடன் எந்த ராசிக்காரர்கள் ஒத்துப்போவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம் விருச்சிகம்

மேஷம் விருச்சிகம்

செவ்வாய் ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் விருச்சிக ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் விரிசல் வரும். அதெப்படி இரண்டுமே செவ்வாய் ஆதிக்கம்தான் என்று கேட்கலாம். மேஷம் ராசி நெருப்பு குணம் கொண்ட ராசி. விருச்சிகம் நீர் ராசி. இவர்கள் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பண்பு இருக்காது. அதனால்தான் ஜோடி சேர்க்கும் போது மேஷத்துடன் விருச்சிகத்தை சேர்க்க வேண்டாம். நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் இணையலாம்.

ரிஷபம் விருச்சிகம்

ரிஷபம் விருச்சிகம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

மிதுனம் கடகம்

மிதுனம் கடகம்

புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.

சிம்மம் கன்னி

சிம்மம் கன்னி

சிம்மம் நெருப்பு ராசி. கன்னி நில ராசி இந்த ராசிக்காரர்களின் இல்வாழ்க்கை தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நாளடைவில் சிம்மத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இருவருக்கும் இடையே உறவில் மன உளைச்சல் அதிகரித்து சண்டைகள் ஏற்படும்.

கன்னி விருச்சிகம்

கன்னி விருச்சிகம்

கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னிராசிக்காரர்களும் மிதுன ராசிக்காரர்களும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் சின்னச் சின்ன பிரச்சினை கூட பூதாகரமாக வெடிக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காரணம் சுக்கிரனின் அதிபதி காதலை உற்சாகப்படுத்துவார். துலாம் காற்று ராசி, மீனம் நீர் ராசி இவர்கள் இணைந்தால் தினசரி போர்தான். பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதே இவர்களுக்குத் தெரியாததால், இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள். ஆனால் இருவருக்கும் அன்பு குறைந்து போவதால், மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். தனுசு ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுடன் இணையக்கூடாது.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். கும்பம் ராசிக்காரர்கள் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். மிதுனம், துலாம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை காதலித்து திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+