தேய்பிறை அஷ்டமி: ஏழரை சனி, பில்லி சூனியம் பாதிப்பு நீக்கும் பத்து யாகங்கள்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 06.07.2018 வெள்ளிக்கிழமை பலன் தரும் பத்து ஹோமங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.
வேலூர்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தடைகளை தகர்த்து பிரச்சனைகள் தீர்க்கும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யகத்துடன் பலன் தரும் பத்து ஹோமங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 06.07.2018 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீ மஹா கணபதி யாகம், சத்ரு சம்ஹார ஷண்முகர் ஹோமம், அஸ்வாரூட பார்வதி யாகம், ஸ்ரீ வாராஹி ஹோமம், ஸ்ரீ சரப ஹோமம், ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ பகளாமுகி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யாகம் சென்னை, போரூர் சரப ப்ரத்யங்கிரா தேவி பீடம், தவத்திரு. டாக்டர். ஸ்ரீ அண்ணாமலை ஸ்வாமிகள் அவர்கள் பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இந்த யாகத் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

யாகத்தின் பலன்கள்:
ஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி,போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு, ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள், மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான பிரச்சனைகளுக்கும், 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில் பல்வேறு விதமான மூலிகை பொருட்கள் கொண்டு நடைபெறும் பத்து யாகங்களில் கைங்கர்யம் செய்து நம்பிக்கையுடன் பங்கேற்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு பரிபூர்ண பலன் கிடைக்கும் என்கிறார் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி யாகத்தில் பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications