இந்த ராசிக்காரங்க சிரிக்க சிரிக்க பேசும் நகைச்சுவை மன்னர்கள் - நீங்க எந்த ராசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிரிப்பு ஒருவருக்கு வருவது இயல்பானது. சிரிக்கத் தெரிந்த ஒருவர் மற்றவையும் சிரிக்க வைப்பார். நகைச்சுவையாக பேசத்தெரிந்தவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும். மூளையில் தோன்றும் மாற்றமே நகைச்சுவை உணர்வையும் கூடவே சிரிப்பையும் ஏற்படுத்துகிறது. இதற்குக் காரகர் புதன். புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

நகைச்சுவை உணர்வுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளது. ஜாதக அமைப்பில் புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று ஒருவரின் சுப தொடர்புகளான நகைச்சுவை, மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

These Zodiac Signs Have The Best Sense Of Humor

மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தங்களுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடுவார்கள். அதிலும் இவர்கள் காரியவாதிகள் என்பதால் வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவார்கள். வீண் பழி சொற்களுக்கும் செவிசாய்க்க மாட்டார்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் அதிகமாக இருக்கும். ராசி அதிபதி புதன் ஆட்சி பெற்று அமர்ந்து விட்டால் போதும் பேச்சுக்கும் சிரிப்பும் பஞ்சமில்லாமல் இருக்கும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அனைத்து விஷயத்திலும் சிரித்து, மகிழ்ச்சியாக இருக்க என்ன விஷயம் இருக்கிறது என்பது பற்றி தான் சிந்திப்பார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் லக்னமாக அமைந்து லக்னத்தில் சுக்கிரன், சந்திரன், புதன், இணைந்து அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது நகைச்சுவை உணர்வு அதிகரிக்கச் செய்யும்.

கால புருஷ மூன்றாம் இடமான மிதுன ராசி லக்னமாகி லக்னத்தின் புதன் ஆட்சி பெற்று திரிகோணஸ்தானமான துலாம் ராசியில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து நிற்பது. காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் லக்னமாகி, இவற்றோடு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு கொள்வது நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும்.

புதன் கன்னி ராசி லக்னமாகிலக்னத்தில் புதன் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்று மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பவர்கள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள். பொதுவாகவே எந்த ராசி லக்னமானாலும் சந்திரன், புதன் சுக்கிரன் ஆட்சி பெற்று தொடர்பில் நிற்பது சிரித்து பேசும் தன்மையை தரும்.

ஜாதகத்தில் புத்திரகாரகன் புதனுக்காக பத்ர யோகம் பெற்று நிற்பது மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்று நிற்பது. மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் ராகு நின்று தனது திரிகோண பார்வையால் இரண்டு காற்று ராசிகளுக்கு தொடர்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் நகைச்சுவை மன்னர்களாக இருப்பார்கள்.

மகரம் ராசிக்காரர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் படைத்தவர்கள் என்பதால் பேச்சில் தங்களுடைய சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி எதையும் சாதிப்பார்கள். சிரிக்க சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+