2020ஆம் ஆண்டில் சொந்த வீட்டில் குடியேறப்போகும் யோகம் யாருக்கு கிடைக்கும்
வருடம் முழுவதும் வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா? நமக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்கா என்று யோசிக்கலாம். 2020ஆம் ஆண்டில் சொந்த வீடு கட்டும் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும் என்று கிரகங்களின்
Recommended Video
சென்னை: 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது, வருடம் முழுவதும் வாடகை வீட்டில் வசித்து கஷ்டப்படுகிறோமே இந்த ஆண்டாவது சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் இருக்கிறதா என்று பலரும் யோசிக்கலாம். கை நிறைய பணம் இருந்தும் இடம் வாங்க முடியலையே வீடு கட்ட முடியலையே பலரும் ஆதங்கப்படுகிறீர்கள். ஆனால் இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரத்தை பொறுத்து யார் யார் சொந்த வீடு கட்டலாம் சொந்தமாக இடம் வாங்கலாம் என்று பார்க்கலாம்.
ஒருவருக்கு சொந்த வீட்டுமனை அமைய ஜாதகத்தில் நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதைப் பொறுத்து மாடமாளிகையில் வசிக்கும் யோகம் அமைகிறது.
ஜாதகத்தின் ராசிகட்டத்தில் நான்காம் வீட்டின் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அமர்ந்து அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் கட்டாயம் சொந்தவீடு கட்டி அதில் வசிக்கக்கூடிய யோகம் கிடைக்கும். நான்காம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் வாய்க்கும்.

நிலம் வாங்கும் யோகம்
நான்காம் வீட்டில் செவ்வாய் பலமுடன் நின்று சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது கட்டாயம் வீடு கட்டும் அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் திசை ஆட்சி/உச்ச பலத்துடன் நடைபெறும்போதும் சொந்தவீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கைஅமைப்பு உண்டாகும்.

அசையா சொத்து யோகம்
ஒருவருக்கு நான்காம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், நான்கில் பலமாக அமையப்பெற்ற கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.

மேஷத்திற்கு சொந்த வீடு யோகம்
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு கேது உடன் கூட்டணி அமைத்துள்ளது கோடீஸ்வர யோகம். பாக்ய குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் 2020ஆம் ஆண்டில் சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் தேடி வரும்.

சொத்துக்கள் வாங்கலாம்
மகரம் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது. சொத்துக்கள், வீடு மனை வாங்கலாம் வீடு கட்டலாம். கும்பம் ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அவரது பார்வையும் 3,5,7ஆம் வீடுகளை பார்வையிடுவதால் சொத்துக்கள் வாங்கலாம் சொந்த வீடு கட்டும் யோகம் வருகிறது. மீனம் ராசிக்கு குரு பகவான் தன ஸ்தானத்தை பார்ப்பதால் தன வருமானம் வரும். நான்காம் வீட்டை பார்ப்பதால் சொத்து சுகம் தீரும்

முருகன் வழிபாடு
நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய் .இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருப்பீங்க ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள் ,எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும் மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவானாவார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

யோகம் தரும் முருகன்
செவ்வாய்கிழமை அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றி விட்டு ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயத்தில் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து சிவப்பு துணியில் முடிந்து வைக்க வேண்டும். பின்னர் அருகில் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும், பின்பு வீட்டுக்கு வந்தவுடனே பால் அல்லது ஜூஸ் இது மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடர வேண்டும். மாலையில் முருகன் கோவிலுக்கு போய் விளக்கேற்றிவிட்டு வந்து சாப்பிடலாம் முருகன் அருளால் சொந்த வீடு யோகம் அமையும்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications