துலாம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: ஆரோக்கியம் நிறைந்த அற்புதமான மாதம்
ஏப்ரல் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையால் நோய் பாதிப்புகள் நீங்கி அற்புதம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
சென்னை: குருபகவானின் பொன்னான பார்வையும் சுக்கிரபகவானின் பார்வையும் இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைப்பதால் ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழந்தைகளால் சந்தோஷம் நிறைந்த மாதமாக மாறப்போகிறது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சுப காரியம் நடைபெறும்
சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசி அதிபதி மாதத்தின் முதல் 10 நாட்கள் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப் போகிறது. 10ஆம் தேதிக்கு மேல் சுக்கிரனின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல தன வருமானம் வரும்.

நோய்கள் நீங்கும்
மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிரிகள் தொல்லை நீங்கும் நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மருத்துவர்களுக்கு இது நல்ல மாதம்.

திருமணம் புத்திரபாக்கியம்
மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற சூரியன், சூரியன், புதன் பகவான் பார்வையும் உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. குருவின் பொன்னான பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன கவலைகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

மாற்றம் முன்னேற்றம்
புதன் பகவானின் இடமாற்றத்தினால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் விழிப்புணர்வும் அவசியமும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications