தனுசு ராசியில் சந்திரன் சனி கூட்டணி - இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்

தனுசு ராசியில் சந்திரன் சனியோடு கூட்டணியில் அமர்ந்துள்ளார். ரிஷபத்தில் சூரியன், புதன், மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் ராகு துலாமில் குரு இருக்க மகரத்தில் செவ்வாய் கேது உடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுசு ராசியில் சந்திரன் அமர்ந்திருக்க ரிஷபத்திற்கு சந்திராஷ்டமம். இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

தனுசு ராசியில் சந்திரன் சனியோடு கூட்டணியில் அமர்ந்துள்ளார். ரிஷபத்தில் சூரியன், புதன், மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் ராகு துலாமில் குரு இருக்க மகரத்தில் செவ்வாய் கேது உடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

ரிஷப ராசிக்காரர்களும், தனுசு ராசிக்காரர்களும் வாயை மூடி பேசவும், மவுன விரதம் இருப்பது நல்லது. காரணம் சந்திரன் சில நேரங்களில் மன சங்கடங்களை ஏற்படுத்துவார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு காதல் உணர்வுகள் எப்படியிருக்கு? பலன்கள் பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, சந்திரன் 9வது வீட்டில் இருக்கிறார் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்றைய தினம் ரொமான்ஸ் ரகசியங்கள் மனதிற்குள் மத்தாப்பு பூக்க வைக்கும். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பார்கள். பிள்ளைகள் உற்சாகப்படுத்துவார்கள். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மங்கள காரியங்கள் பற்றி பேசலாம். பொறுமையோடு இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும். நீல நிற ஆடைகள் அணிய ஏற்ற நாள். ராசியான எண் 3.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே சந்திரன் 8வது வீட்டில் இருக்கிறார். சந்திராஷ்டமம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் அழுத்தம் டென்சனை ஏற்படுத்தும். ஜாக்கிரதையாக இருக்கவும். சவால்களை சமாளிக்க வேண்டிய நாள் இது. பிற்பகலுக்கு மேல் சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தைரியம் பளிச்சிடும். மஞ்சள் நிற ஆடைகள் அணியலாம். ராசியான எண் 2,9

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சந்திரன் ராசிக்கு 7வது வீட்டில் இருப்பதால் மனைவியிடம் அமைதியாக பேசவும். இன்று நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத்தடைகள் நீங்கும். காதல் உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். இன்று பகல் 03-37 மணி முதல் 05-06-2018 அன்று அதிகாலை 04-33 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். ராசியான நிறம் நீலம், ராசியான எண்கள் 5,8

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் மறைந்திருக்கிறார். சின்னச் சின்ன செலவுகள ஏற்படும். இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ராசியான நிறம் மஞ்சள்,ராசியான எண்கள் 3, 9

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே சந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் இருக்கிறார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை.

இன்று புதிய விதமான உறவுகள் நீடிக்கும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண்கள் 5, 9

கன்னி

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்துள்ளதால் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. சின்னச் சின்ன தடங்கல்கள் ஏற்படும்.

ரிலாக்ஸ் ஆக இருக்கவும். கோபமான சொற்களை பேச வேண்டாம் பேச்சில் இனிமை தேவை. உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 3,9.

துலாம்

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்துள்ளதால் உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். குரு பகவான் வக்ரகதியில் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளார். இன்று தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். ராசியான நிறம்: நீலம், ராசியான எண்கள்: 2, 5.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் 2வது வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பாத சனி இருப்பதால் கால்கள் மீது கவனம் தேவை . செல்வாக்குடன் சொல்வாக்கும் ஏற்படும். இன்று நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 2,6

தனுசு

தனுசு

தனுசு ராசியில் சந்திரன் சனியோடு அமர்ந்து உள்ளதால் இன்று குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தடங்கள் ஏற்பட்ட வேலைகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். பணம் வரவும், செலவும் சரியாக இருக்கும். ராசியான நிறம் நீலம், சிவப்பு ராசியான எண்கள் 3,5.

 மகரம்

மகரம்

ராசிக்குள் கேதுவும் செவ்வாயும் இணைந்துள்ளனர். விரைய ஸ்தானத்தில் சந்திரன், சனி இருக்க சின்னச் சின்ன செலவுகள் சுப செலவுகளாக அமையும். இன்று குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, ராசியான எண்கள் 1,6.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் பண வரவு அதிகரிக்கும். விரைய ஸ்தானத்தில் செவ்வாய் கேது உடன் அமர்ந்து உள்ளதால் எச்சரிக்கை தேவை. ஆலய தரிசனம் செய்ய ஏற்ற நாள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 6,8.

மீனம்

மீனம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் வேலை செய்யும் இடத்தில் அழுத்தம் அதிகரிக்கும். குழந்தைகள் இடத்தில் அக்கறை தேவை.

சிலருக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை, ராசியான எண்கள் 9, 5.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+