Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஷம், விருச்சிகம் ராசிக்காரங்க 2 நாளைக்கு மவுன விரதம் இருக்கலாம்

விருச்சிக ராசியில் நீச்ச நிலையில் சந்திரன் அமர்ந்துள்ளார். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் மவுன விரதம் இருப்பது நல்லது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    23-07-2018-இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: விளம்பி வருடம் ஆடி 07, திங்கட்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 12.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். இன்றைக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

    இன்றைக்கு கடகத்தில் சூரியன், புதன், ராகு, துலாமில் குரு, விருச்சிக ராசியில் சந்திரன், தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் கேது, செவ்வாய், என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பம் ஏற்படும், மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் அமைதியாக இருப்பது ரொம்ப நல்லது.


    மேஷம்

    மேஷம்

    ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

    இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. 24 ஆம் தேதி பகல் 03-30 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும். ராசியான நிறம் வெண்மை, மஞ்சள், ராசியான எண்கள் 2, 5.

    ரிஷபம்

    ரிஷபம்


    ராசிக்கு 7வது வீட்டில் களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். சந்திரன் உங்கள் ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் இன்று புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். ராசியான நிறம் வெள்ளை, பச்சை ராசியான எண்கள் 1, 3.

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். ராசியான நிறம் இளஞ்சிவப்பு, மஞ்சள், ராசியான எண்கள் 3, 6.

    கடகம்

    கடகம்

    ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. இன்று மாணவர்களின் திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, மஞ்சள் ராசியான எண்கள் 1, 3.

    சிம்மம்

    சிம்மம்


    ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம் இதனால் உடல் நலம் பாதிக்கும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள்: 1, 3.

    கன்னி

    கன்னி


    ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளி போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

     துலாம்

    துலாம்

    ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் பணம் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வருமானம் அதிகரிக்கும். இன்று பணியில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்துவீர்கள். ராசியான நிறம் நீலம், வெளிர் பச்சை, ராசியான எண்கள் 6, 9.

     விருச்சிகம்

    விருச்சிகம்


    ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருப்பதால் மனதில் லேசான சஞ்சலம் இருக்கும் இன்று உறவினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    தனுசு

    தனுசு

    ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். இன்று மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 3, 5.

    மகரம்

    மகரம்

    ராசிக்கு 11 வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று பணவரவு அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை ராசியான எண்கள்1, 3.

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 10 வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். உங்களின் அறிவு திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ராசியான நிறம் வெளிர் நீலம், மஞ்சள் ராசியான எண்கள் 4, 6.

     மீனம்

    மீனம்

    ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். இன்று நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+