இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகம் தெரியுமா?

கும்ப ராசியில் இன்றைக்கு சந்திரன் அமர்ந்துள்ளார். கடகம் ராசிக்காரர்களுக்கு நாளை காலை வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு என்ன பலன்களை என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்திரை மாதம் 27ஆம் நாள் மே 10ஆம் தேதி இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

இன்றைய தினம் மேஷத்தில் சூரியன், புதன், ரிஷபத்தில் சுக்கிரன் கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசில் சனி பகவான், மகரத்தில் கேது, செவ்வாய் கும்பத்தில் சந்திரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இன்றைக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

உங்கள் ராசியில் சூரியன், புதன் உள்ளதால் அரசாங்கம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். சந்திரனால் மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல சிந்தனை ஏற்படும். மன அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் தைரியத்தை மட்டும் இழந்து விட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், புதன் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளதால் வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன சங்கடங்களை சந்திக்கலாம். கண் தொடர்பான நோய்கள் ஏற்படலாம் கவனம் தேவை. போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுனம்

ராசிநாதன் புதன் சூரியனுடன் சேர்ந்து லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். பணம் பாக்கிகள் வரும். இன்று எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். கண்டக சனியால் வும் இருப்பதால் சிக்கனமாக செலவழிக்கவும்.

கடகம்

கடகம்

உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராகு சின்னச் சின்ன குழப்பதை தருவார். சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பத்தாமிடத்தில் இருப்பதால் பண வரவும் அதிகரிக்கும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிக்கு 9வது இடத்தில் சூரியன் புதனோடு அமர்ந்துள்ளதால் தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்று முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்படலாம். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி

கன்னி

சூரியன் புதனுடன் சேர்ந்து எட்டாமிடத்தில் மறைந்து இருப்பதால் அலுவலக விசயங்களில் கவனம் தேவை. இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறையும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். அர்த்தாஷ்டம சனியால் செலவுகள் வந்து கொண்டேயிருக்கும். அதை சமாளிக்க பணப்புழக்கம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம்

இன்று உங்கள் ராசியில் குருபகவான் வக்ர நிலையில் அமர்ந்துள்ளார். சூரியனும், புதனும் மேஷ ராசியில் நின்று கொண்டு 7வது பார்வையாக பார்க்கிறார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலையில் மாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சூரியன் புதனுடன் அமர்ந்து மறைந்திருக்கிறார். அலுவலக பணியில் சிக்கல் உண்டாகும். ன்று வாடிக்கையாளர்களைக் கவர புதிதாக திட்டமிடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும்.

சனி இரண்டாமிடத்தில் வாக்கு ஸ்தானத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சினை தவிர்க்கவும். இல்லை எனில் நாக்கில் சனி தனது வேலையை காட்டி விடுவார்.

தனுசு

தனுசு

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். ஜென்ம ராசியில் சனி அமர்ந்து உள்ளார். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். ராகுவினால் திடீர் யோகம் உண்டாகும். கேதுவினால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சூரியன்,புதனோடு 4வது வீட்டில் இருக்கிறார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பிரயாணம் செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனியால் வீண் அலைச்சல் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சூரியன், புதன் முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் இருக்கின்றனர். இன்று நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம்அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் எண்ணம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். அலைச்சல் அதிகமாக இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.

மீனம்

மீனம்

சூரியன், புதன் வாக்கு ஸ்தானமான 2வது வீட்டில் இருக்கின்றனர். வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும் மரியதையும் கூடும். இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் இன்றைக்கு லாபம் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+