இன்றைய ராசிபலன் - மகரம், மிதுனம் ராசிக்காரர்கள் வாயை மூடி பேசவும்

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்கிழமை வரை சந்திராஷ்டமம் என்பதால் இருவரும் அமைதி காக்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்திரை மாதம் 24ஆம் தேதி மே 7ஆம் தேதி கிரக நிலைப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன் கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசில் சனி பகவான், மகரத்தில் சந்திரன், கேது, செவ்வாய் மீனம் ராசியில் புதன் என அமர்ந்துள்ளனர்.

மனோகாரகன் சந்திரன் மகரம் ராசியில் ஞானகாரகன் கேது, புரட்சி கிரகம் செவ்வாய் உடன் இணைந்து அமர்ந்துள்ளார். இந்த ராசிக்காரர்களும் அமைதி காப்பது நல்லது.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு எட்டாமிடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக பேசவும். இன்றைக்கு எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் செவ்வாய் இணைந்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

அஷ்டமத்தில் சனியிருந்தாலும் 9ஆம் வீடான தர்ம ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். திருமண ஏற்பாடுகள் பற்றி பேசலாம். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் வகையில் கவனம் தேவை. இன்று உங்கள் காதலி அல்லது காதலனின் கண்கள் ஒரு அன்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. வண்டி வாகனங்களில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரவு திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். 08-05 -2018 அன்று இரவு 08-59 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விட வேண்டாம்.

கடகம்

கடகம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து ராசியை 7வது பார்வையாக பார்க்கிறார். கேதுவும், செவ்வாயும் ராசியை பார்க்கின்றனர். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். உங்கள் காதலன் அல்லது காதலியுடன் உற்சாகமாக செலவிடும் நாளாகும்.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்து இருப்பதால் கவனம் தேவை. இன்று பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். குரு இருப்பதால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். இன்று உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலம் பாதிக்கப்படும் கவனம் தேவை. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்படும்.

கன்னி

கன்னி

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை.

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். வாக்குவாதம், கருத்து வேறுபாடு ஆகியவை நிறைந்த நாள் காதலி, வாழ்க்கைத்துணையுடன் கவனமாக செயல்படவும்.

துலாம்

துலாம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன டென்சன் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உடல் நலம் உற்சாகமாக இருக்கும். ரொமான்ஸ் அதிகம் நிறைந்த நாள் இது. துணையுடன் உற்சாகமாக பொழுதை போக்குவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சந்திரன் சஞ்சாரம் நற்பலன்களை தரும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். சனியின் சஞ்சாரம் எதிர்ப்புகளை விலக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனம் தேவை.

தனுசு

தனுசு

ராசிக்கு 2வது வீடான குடும்ப, தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் இன்று குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். வாழ்க்கை துணையோடு காதல் பேச்சுகள் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

மனோகாரகன் சந்திரன் ராசியில் அமர்ந்துள்ளார். காரியங்கள் சற்றே இழுபறியாக இருந்தாலும் முடிவு நன்மையாகவே இருக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். உங்கள் காதலன் அல்லது காதலிக்கு உங்கள் மீது இன்று சந்தேகம் வரலாம் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

கும்பம்

கும்பம்

சந்திரன் ராசிக்கு 12வது வீட்டில் மறைந்திருக்கிறார். சின்னச் சின்ன மறதிகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

காதலன் காதலி இடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+