கன்னிக்கு காதல்... கடகத்திற்கு சந்திராஷ்டமம் - இன்றைய ராசி பலன்கள்
சென்னை: சித்திரை மாதம் 26ஆம் நாள் மே 9ஆம் தேதி இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
மேஷத்தில் சூரியன், மிதுனத்தில் இருக்கும் புதன் மேஷத்திற்கு இடம் மாறுகிறார். ரிஷபத்தில் சுக்கிரன் கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசில் சனி பகவான், மகரத்தில் கேது, செவ்வாய் கும்பத்தில் சந்திரன் என கிரகங்கள் அமர்ந்துள்ளன.
இன்றைக்கு கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காக்கவும். கும்பம் ராசிக்காரர்களும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்
மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே ராசிக்கு 11வது இடத்தில் அதாவது லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். இன்று நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இன்றைக்கு வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள். புதன் ஜென்மராசியில் இருப்பதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். காதலை சொல்லவும் அன்பை பரிமாறவும் இன்றைக்கு நல்ல நாளாகும். உடல் நலம் சற்றே பாதிக்கப்பட்டாலும் மற்றபடி செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கக் கூடிய சூப்பரான நாளாகும்.

ரிஷபம்
இன்றைய தினம் ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ப பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும்.

மிதுனம்
இன்றைக்கு ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் நுழைவதால் உற்சாகம் அதிகரிக்கும் நாளாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்று உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போது கவனமாகவும் இருப்பது நல்லது. உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் இன்றைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம். மனதடுமாற்றம் ஏற்படும். வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம். அமைதி காப்பது நல்லது. வீட்டில் வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். விலைமதிப்பு மிக்க பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும். கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் தீ பற்றி எரியும் நாளாகும்.

சிம்மம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் வீட்டில் பொறுமையாக பேசவும். சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். இன்று தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். அலுவலகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் வீட்டில் உள்ள டென்சனால் அலுவலக வேலையில் பாதிப்பு ஏற்படும்.

கன்னி
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் முன்னேற்றமான நாள். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். இன்று நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும். புதிய காதல் உருவாகலாம். முறிந்து போன காதலும் இன்று மீண்டும் துளிர்க்கலாம். கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் ஆன நாள்தான்.

துலாம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பேச்சுக்களை இன்று பேசலாம். இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் அடையும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் அம்மாவின் உடல் நலனின் அக்கறை தேவை.
உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டில் கலகலப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் நன்மை ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

தனுசு
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்கவும். இன்று சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

மகரம்
மகரம் ராசிக்காரர்களே ராசிக்கு 2வது வீடான தன, வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் சொல்வாக்கும், செல்வாக்கும், பண வரவும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். வரவிற்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும் காரணம் விரைய சனியால் செலவை கட்டுப்படுத்த முடியாது.

கும்பம்
ராசியில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் மனக்குழப்பம் அதிகரிக்கம். இன்று உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்துவீர்கள். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். பணம் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். காதல் வேகத்தில் இதய துடிப்பும் அதிகரிக்கும்.

மீனம்
ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் தூக்கம் குறைபாடு ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம். இன்று மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணியிடத்தில் வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். காதல் உணர்வுகள் அதிகரிக்கும் நாள் இது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications