கடக ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம்... கவனமாக இருங்க - இன்றைய ராசிபலன்
மனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் கும்பம் ராசியில் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும்.
சென்னை: இன்றைய தினம் ஆடி 14 ஆம்தேதி திங்கட்கிழமை, துவிதியை திதி காலை 06.40 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் காலை 06.32 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திரன் இன்றைய தினம் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
கடகம் ராசியில் சூரியன், புதன், ராகு சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் குருபகவான், தனுசு ராசியில் சனிபகவான், மகரத்தில் கேது செவ்வாய், கும்பத்தில் சந்திரன் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
இன்றைய தினம் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த வம்புக்கும் போகாமல் வாயை மூடி மவுனவிரதம் இருப்பது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்களை பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு 11வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் பணவரவு அதிகரிக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண்கள் 1, 3.

ரிஷபம்
ராசிக்கு 10 வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் பணிபுரியும் இடத்தில் வேலை அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண்கள் 3, 9.

மிதுனம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த இரு தினங்களாக இருந்த பிரச்சினைகள் சரியாகும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. ராசியான நிறம் கருநீலம், மஞ்சள், ராசியான எண்கள்: 2, 5.

கடகம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். இன்று சந்திராஷ்டமம் என்பதால் உத்தியோகம் பார்ப்பவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்கவும். சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். மனதில் கலக்கமாக இருக்கும் என்பதால் ஆலய தரிசனம் செய்வது நன்மை தரும். ராசியான நிறம் நீலம் ராசியான எண்கள் 5, 6.

சிம்மம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் வீட்டில் அமைதியாக இருக்கவும். ராசியை சந்திரன் சம சப்தமமாக பார்வையிடுகிறார். இன்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 1, 5.

கன்னி
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. சின்னச் சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ராசியான நிறம் வெண்மை, பச்சை ராசியான எண்கள் 1, 3.

துலாம்துலாம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. உல்லாச பயணம் செல்வீர்கள்.இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். ராசியான நிறம் வெள்ளை, நீலம் ராசியான எண்கள் 6, 9.

விருச்சிகம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வண்டி வாகனங்கள் பராமரிப்பு செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். ராசியான நிறம் வெளிர் நீலம், ராசியான எண்கள்: 5, 7

தனுசு
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். செய்யும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 5.

மகரம்
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். பணவருவாய் அதிகரிக்கும், பேசும் வார்த்தையில் கவனமாக இருக்கவும். இன்று மனைவி முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ராசியான நிறம் மஞ்சள், ஆரஞ்சு ராசியான எண்கள் 1, 3.

கும்பம்
ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளதால் மனக்கலக்கம் ஏற்படும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 2, 5.

மீனம்
ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சுபவிரையம் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் செய்யலாம். இன்று கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண் 9, 3.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications