எந்த ராசிக்காரங்களுக்கு இன்று பணம் வரும் தெரியுமா? - ராசிபலன்கள்
மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் இன்று சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.
சென்னை: திங்கட்கிழமை சந்திரபகவான் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ரிஷபத்தில் சூரியன், மிதுனத்தில் புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு துலாமில் குருபகவான் தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது மற்றும் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
சந்திரனின் சஞ்சாரத்தினால் மேஷ ராசிக்காரர்களும், கன்னி ராசிக்காரர்களும் குழப்பமடைய வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது.
மிதுனம் ராசிக்காரர்களுக்கும், மீனம் ராசிக்காரர்களுக்கும் இன்று பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் உற்சாகமாக இருக்கலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

மேஷம்
ராசியில் சந்திரன் அமர்ந்திருப்பதால் தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். ராசியான நிறம் ஊதா, மஞ்சள் ராசியான எண்கள்: 1, 3.

ரிஷபம்
ராசிக்கு 12வது இடமான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. பணம் வருவதோடு கூடவே சுப செலவுகளும் ரெடியாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம் ராசியான எண்கள்: 3, 6.

மிதுனம்
ராசிக்கு 11வது இடமாக லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் பணம் வரும். போட்டிகள் சாதகமான பலன் தரும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்
ராசிக்கு பத்தாவது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.அலுவலகத்தில் இன்று எச்சரிக்கை தேவை. வேலையில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். பணம் தாமதப்பட்டாலும் வந்து சேரும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், ராசியான எண்கள் 1, 3.

சிம்மம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் இருப்பதால் பாஸ்போர்ட் எடுக்க இன்று முயற்சி செய்வது நல்லது. அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை.அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். ராசியான நிறம் வெள்ளை, நீலம் ராசியான எண்கள்: 2,7.

கன்னி
எட்டாவது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் பொது இடத்தில், வீட்டில், அலுவலகத்தில் வாயை மூடி பேசவும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும் என்பதால் மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது நல்லது. பெண்கள் வீட்டில் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். நன்மைகள் நடக்க ராசியான நிறம் பச்சை, வெள்ளை, ராசியான எண்கள் 5, 9

துலாம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவதில் கவனம் தேவை. ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 2, 6.

விருச்சிகம்
ராசிக்கு 6வது சந்திரன் மறைந்துள்ளார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள்: 1, 6.

தனுசு
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ராசியான நிறம் நீலம், சிவப்பு ராசியான எண்கள்: 3, 5.

மகரம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வண்டி வாகன பராமரிப்பு ஏற்படும். பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள்: 2, 6.

கும்பம்
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார் இன்று மனதில் தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதை அதிகரிக்கும். ராசியான நிறம் நீலம்,பிங்க், ராசியான எண்கள் 2, 5.

மீனம்
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணவரவு அதிகரிக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ராசியான நிறம் நீலம், ஆரஞ்ச் ராசியான எண்கள் 3,9












Click it and Unblock the Notifications