Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று யாருக்கு பணம் வரும்... யாருக்கு செலவு தெரியுமா? - ராசிபலன்

வியாழக்கிழமையான இன்று ரிஷபத்தில் சந்திரன் சஞ்சாரம் மனக்குழப்பத்தை தரும். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷம் முதல் மீனம் வரை இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யாருக்கு செலவும், டென்சனும் ஏற்படும் என்று பார்க்கலாம்.

ரிஷபத்தில் சூரியன் சந்திரன், மிதுனத்தில் புதன், கடகத்தில் ராகு, சுக்கிரன் துலாமில் குருபகவான், தனுசில் சனி, மகரத்தில் கேது மற்றும் செவ்வாய் என கிரக நிலைகள் அமைந்துள்ளன.

இன்றைய தினம் மேஷம், கடகம், கன்னி ராசிக்காரர்களுக்க ரொமான்ஸ் அதிகமாகவே இருக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரவு இருந்தாலும் வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். இன்று கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன சண்டைகள் ஊடல்கள் ஏற்பட்டாலும் கடைசியில் கூடலில் முடியும். வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் கவனம் தேவை. ராசியான நிறம் பச்சை, சிவப்பு, ராசியான எண்கள் 1, 3.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். போகும் இடமெல்லாம் தடை ஏற்படுவதால் டென்ஷன் ஏற்படும். குழப்பமான சூழ்நிலையால் மறதி வரும் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள். ராசியான எண்கள் 2, 7.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் இருப்பதால் விரைய செலவுகள் ஏற்படும். 2வது வீட்டில் உள்ள ராகு, சுக்கிரனால் பணவரவும், ஆடம்பர பொருட்கள் சேர்க்கையும் ஏற்படும். காலை முதலே உற்சாகம் ஊற்றெடுக்கும். நகைச்சுவையாக பேசி எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ராசியான நிறம் ஆரஞ்சு, மஞ்சள், ராசியான எண்கள் 1, 3.

கடகம்

கடகம்

ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் காலையிலேயே கூப்பிட்டு பாராட்டுவதோடு பதவி உயர்வும் கொடுப்பார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அருவியாக கொட்டும். மண வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண்கள் 5, 7.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் அலுவலகத்தில் லேசான மந்தநிலை தொடரும். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று பொழுதை கழித்து மேலதிகாரியிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம். வீட்டில் உறவினர்கள் வருகையால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வண்டி, வாகனம் வாங்கலாம். பழுதடைந்த வாகனங்களை இன்று புதுப்பிக்கலாம். இன்று வரவை விட செலவுகள் அதிகமாகவே இருக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். ராசியான நிறம் வெள்ளை,இள மஞ்சள், ராசியான எண்கள் 6, 9.

கன்னி

கன்னி

ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளலாம். தன ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பண வரவு உற்சாகமாக இருக்கும். இன்று ரொமான்ஸ் செய்ய உற்சாகமான நாள் என்பதால் உங்கள் துணையோடு அவுட்டிங் செல்லலாம். பண புழக்கம் திருப்தி தருவதோடு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரியில் மாணவர்கள் பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவார்கள். ராசியான நிறம் சிவப்பு ராசியான எண்கள்: 5, 9.

துலாம்

துலாம்

ராசிக்கு 8வது வீட்டில் உள்ள சந்திரனால் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல வேண்டியிருக்கும். பணம் வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். துணையுடனான ரொமான்ஸ் சுமாராகவே இருக்கும். இன்று ராசியான நிறம் மஞ்சள், வெளிர் பச்சை ராசியான எண்கள்: 3, 7.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து கொண்டு சந்திரன் உங்கள் ராசியை சம சப்தம பார்வை பார்ப்பதால் கணவன் மனைவிக்கு இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். ஜென்ம குருவால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். ராசியான நிறம்: நீலம், வெளிர் பிரவுண் ராசியான எண்கள் 2, 6.

தனுசு

தனுசு

ராசிக்கு 6வது வீட்டில் மறைந்துள்ள சந்திரனால் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் ஏற்படுவது சகஜம்தான். காதல் விவகாரங்களில் கவனமாக இருப்பது நல்லது. கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும். இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். ராசியான நிறம்: நீலம், பச்சை, ராசியான எண்கள் 5, 9

மகரம்

மகரம்

ராசிக்கு 5வது இடத்தில் உள்ள சந்திரனால் குடும்பத்தில் பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப கடமைகளை தவற விட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருக்கவும். ராசியான நிறம் வெளிர் மஞ்சள், சிவப்பு, ராசியான எண்கள் 3, 9.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் உள்ள சந்திரனால் அம்மாவின் உடல் நலனில் பாதிப்புகள் ஏற்படும் கவனமாக இருக்கவும். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரிப்பதோடு மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இன்று தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் நல்ல நாள். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. ராசியான நிறம் பச்சை, மஞ்சள் ராசியான எண்கள் 5, 9.

மீனம்

மீனம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். ராசியான நிறம்: வெள்ளை ராசியான எண்கள் 6,9.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+