மீனத்திற்கு பண வரவு அதிகரிக்கும் - இன்றைக்கு ராசி பலன் எப்படி?

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மகரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகர ராசியில் இன்றைய தினம் சஞ்சாரம் செய்வதால் மிதுனத்திற்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

ரிஷபத்தில் சூரியன் புதன், மிதுனத்தில் சுக்கிரன் கடகத்தில் ராகு மகர ராசியில் சந்திரன் கேது செவ்வாய் உடன் இணைந்திருப்பதால் இன்றைக்கு ஆன்மீக பயணம் அதிகரிக்கும். துலாமில் குருபகவான், தனுசில் சனி பகவான், என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய தினம் எப்படி என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

பத்தாவது வீட்டில் சந்திரன் இருப்பதால் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். ராசியான நிறம், ஆரஞ்சு, வெளிர் பச்சை ராசியான எண் 1, 5, 6

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் இருப்பதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்றைய தினம் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். ராசியான நிறம்: மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் மறைந்திருப்பதால் கவனமாக இருக்கவும். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்

கடகம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் இருப்பதால் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. ராசியான நிறம்: சிவப்பு, நீலம் ராசியான எண்கள்: 5,8

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருப்பதால் வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம் பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 1,6

கன்னி

கன்னி

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் இருப்பதால் பிள்ளைகளிடம் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்: 5, 6.

துலாம்

துலாம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் இருப்பதால் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. காரிய தடையால் இன்று மனகுழப்பம், டென்ஷன் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள் 2, 7

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் உள்ளதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண் 3, 9

தனுசு

தனுசு

ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். தொழிலுக்குத் தேவையான நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். தன ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் பணவரவு இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண் 9, 3

மகரம்

மகரம்

ராசியில் சந்திரன் இருப்பதால் மன அமைதிக்கு பங்கம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண்: 4, 6

கும்பம்

கும்பம்

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் மறைந்திருப்பதால் வெளியூர் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். ராசியான நிறம் சிவப்பு,ராசியான எண் 5, 6

மீனம்

மீனம்

ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் மறைந்திருக்கிறார். புதிய முயற்சிகளை இன்று தள்ளிப்போடுவது நல்லது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். எதிரிகளால் இருந்து வந்த பணபிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண் 2,5.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+