நீலக்கலர் இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? - ராசிபலன்

கும்பம் ராசியில் இன்று சந்திரன் சஞ்சாரிக்கப் போகிறார். மேஷம் முதல் மீனம் வரை என்ன ராசிக்காரர்களுக்கு என்ன கலர் இன்று அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்று ராசியான நிறம், ராசி எண்களை அறிந்து கொள்வோம். ரிஷபத்தில் சூரியன், புதன் மிதுனத்தில் சுக்கிரன், கடக ராகு துலாமில் குரு வக்ரம் தனுசில் சனி வக்ரம் மகரத்தில் கேது செவ்வாய், கும்பத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.

கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

செவ்வாய்கிழமை என்பதால் முருகன் கோவிலுக்குச் சென்று இன்று வழிபடலாம் நிலம் தொடர்பான விசயங்கள் பேசி முடிக்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு லாப ஸ்தானமான 11வது இடத்தில் சந்திரன் உள்ளதால் பணவரவு அதிகரிக்கும். தன ஸ்தானத்தில் புதன் இருப்பதால் இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு லேசான அலைச்சல் இருக்கும். ராசியான நிறம் மஞ்சள் மற்றும் நீலம், ராசியான எண்கள் 2, 6.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் இன்று உற்சாகமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 9.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் இருப்பதால் அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
பிற்பகல் வரை புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். ராசியான நிறம் நீலம், சிவப்பு ராசியான எண்கள் 3, 5.

கடகம்

கடகம்


ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் இன்று சந்திராஷ்டமம். பூசம் நட்சத்திரக்காரர்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைக்காது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. ராசியான நிறம்: மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 2, 6.

 சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எந்த முடிவும் எடுக்கும் முன்பாக தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. வீட்டில் மனைவியின் பேச்சு மறு பேச்சு பேசாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை ஏற்படுத்தும். இன்று ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள்: 2, 5.

கன்னி

கன்னி

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் எதையும் ஆலோசித்து முடிவெமுக்கவும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். ராசியான நிறம்: மஞ்சள், நீலம் ராசியான எண்கள்: 1, 3.

துலாம்

துலாம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் இருப்பதால் இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக பேசலாம். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா, ராசியான எண்கள்: 5,9.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் இருப்பதால் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. சொந்த வாகனம் வாங்க நினைப்பவர்கள் இன்று அதற்கான பணியை தொடங்கலாம். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு, ராசியான எண்கள்:6, 9.

தனுசு

தனுசு

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள். ராசியான எண்கள்: 2, 5, 7

மகரம்

மகரம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமந்திருப்பதால் பணவரவு இருக்கும். கூடவே செலவும் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள்: 1, 3.

கும்பம்

கும்பம்

ராசிக்குள் சந்திரன் அமர்வதால் சின்னச் சின்ன மனக்குழப்பம் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம் ஏற்படும். காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. பணம், நகை ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைக்கவும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை. ராசியான எண்கள் 5, 9.

மீனம்

மீனம்

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். மனதில் சின்னச் சின்ன கவலை, பயம் ஏற்படும். உங்களது பேச்சினால் எதிர்ப்பு ஏற்படும் எதையும் யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். ராசியான நிறம் வெள்ளை, நீலம் ராசியான எண்கள்: 2, 7.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+