பச்சைக்கலர் இன்றைக்கு யாருக்கு லக்கி தெரியுமா? - ராசிபலன்கள்

கும்பத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் இன்றைக்கு மீனம் ராசிக்கு மாறுகிறார். பிற்பகல் வரை கடகம் ராசிக்காரர்களுக்கும் மதியத்திற்கு மேல் சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம். 12 ராசிக்காரர்களுக்கும் இன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் இன்றைக்கு மீனம் ராசிக்கு மாறுகிறார். பிற்பகல் வரை கடகம் ராசிக்காரர்களுக்கும் மதியத்திற்கு மேல் சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்று ராசியான நிறம், ராசி எண்களை அறிந்து கொள்வோம்.

ரிஷபத்தில் சூரியன், புதன் மிதுனத்தில் சுக்கிரன், கடக ராகு துலாமில் குரு வக்ரம் தனுசில் சனி வக்ரம் மகரத்தில் கேது செவ்வாய், கும்பத்தில் சந்திரன் பிற்பகலுக்கு மேல் மீனம் ராசிக்கு நகர்கிறார்.

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிற்பகல் வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால் எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைப்பதால் இன்றைக்கு லாபம் கிடைக்கும். இரண்டாம் வீட்டில் புதன் சூரியனுடன் இணைந்து அமர்ந்து உள்ளதால் பதற்றப்படாமல் பேசுங்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். இன்றைக்கு உங்க லக்கி நம்பர் 5,9 மெரூண்,வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் வரப்போவதால் இன்று நன்மைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான மனநிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும் ராசியான எண்கள் 4,6, ராசியான நிறங்கள் ஆலிவ்பச்சை,ரோஸ்

மிதுனம்

மிதுனம்

10வது வீட்டில் சந்திரன் அமர்வதால் வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். ராசியான எண்கள் 3, 7 ராசியான நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்

கடகம்

கடகம்

பிற்பகல் வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பேச்சில் கவனம் தேவை. மதியத்திற்கு மேல் ராசிக்கு 9வது வீட்டிற்கு சந்திரன் வருகிறார். பிற்பகலுக்கு மேல் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். ராசியான எண்கள் 2, 3 ராசியான நிறங்கள் இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை

சிம்மம்

சிம்மம்

இன்று 8வது இடத்தில் சந்திரன் அமர்வதால் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் அமைதி காக்கவும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.இன்று மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் ராசியான எண்கள்: 1, 3.

கன்னி

கன்னி

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் வருவதால் ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். இன்றைக்கு வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் ஏற்படும். குரு இரண்டாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 3, 9

துலாம்

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். ராசியான நிறம்: நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2, 5.

விருச்சிகம்

விருச்சிகம்

5வது வீட்டில் சந்திரன் அமர்வதால் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 2, 6.

தனுசு

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் இருக்கிறார். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும்.

உற்பத்தி செய்த சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ராசியான நிறம் நீலம், சிவப்பு ராசியான எண்கள் 3, 5.

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் உங்கள் பேச்சில் உற்சாகம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 6.

கும்பம்

கும்பம்

பிற்பகல் வரை ராசியில் உள்ள சந்திரன் மதியத்திற்கு மேல் ராசிக்கு 2வது இடத்திற்கு செல்வதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். இரண்டு நாட்களாக இதோ அதோ என்று இழுத்தடித்தவர்கள் பணத்தை கையில் வந்து கொடுப்பார்கள். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பிறருடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 2, 6.

மீனம்

மீனம்

ராசிக்கு 12வது வீட்டில் உள்ள சந்திரன் பிற்பகலுக்கு மேல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் வீண் மனக்குழப்பம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண்கள் 3, 5.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+