திங்கட்கிழமை எந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் தெரியுமா?- இன்றைய ராசிபலன்
திங்கட்கிழமை கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது நல்லது.
சென்னை: ஆவணி 11, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 07.15 வரை பின்பு தேய்பிறை துவிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 03.03 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 03.03 வரை பின்பு மரணயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
கடகத்தில் புதன், ராகு, சிம்மத்தில் சூரியன், கன்னியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு, தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது செவ்வாய், கும்பம் ராசியில் சந்திரன் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதாலும் இருவரும் சற்றே அமைதி காப்பது நல்லது.
இன்று எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம், செலவு யாருக்கு என பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். வருமானம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாள், ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 5.

ரிஷபம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சிதரும் செய்தி ஒன்று உங்களை தேடி வரும். ஆடை,ஆபரணம் சேரும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 3.

மிதுனம்
ராசிக்கு 9வது வீட்டில் இன்று சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 7.

கடகம்
8ஆம் வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக இருப்பது அவசியம், வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வதை விட மவுனவிரதம் இருப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். வீட்டில், அலுவலகத்தில் உங்களை குறைக்கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண் டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதையும் சகித்துக்கொண்டு செல்ல வேண்டிய நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 6.

சிம்மம்
ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் அமைந்துள்ளது. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக பணியாளர்களால் ஆதாயம் உண்டு. புகழ், கௌரவம் கூடும் நாள். பணம் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 1.

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் இன்று லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் நாள் என்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் இன்று லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தொட்டது துலங்கும் நாள் என்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

துலாம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

விருச்சிகம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்துவது அவசியம். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4.

தனுசு
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். இன்று தைரியம் கூடும் நாள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 6.

மகரம்
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் சந்திரன் நின்றிருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நல்ல செய்தி தேடி வரும். வண்டி வாகனங்களினால் வீண் செலவு ஏற்படும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள் ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 7.

கும்பம்
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் கவனமாக இருப்பது நல்லது. மனக்கலக்கம் ஏற்படும். வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேச வேண்டாம். அலுவலகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 8.

மீனம்
ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் நின்றிருப்பதால் விரையம் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த பயம், வீண் கவலைகள் வந்துச் செல்லும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நாள். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 4.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications