Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனம், சிம்மம் ராசிக்காரங்க எல்லாம் இன்றைக்கு ஜாக்கிரதை - இன்றைய ராசிபலன்

மீனம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் மவுன விரதம் இருக்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி 12, செவ்வாய்க்கிழமை, துவிதியை திதி இரவு 08.40 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

இன்றைய தினம் சந்திரன் மீனம் ராசியில் உள்ளது. கடகத்தில் புதன்,ராகு சிம்மத்தில் சூரியன், கன்னியில் சுக்கிரன், துலாமில் குருபகவான், தனுசு ராசியில் சனிபகவான், மகரத்தில் கேது செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மவுன விரதம் இருப்பது நல்லது. மீனம் ராசிக்காரர்களும் மனக்குழப்பம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.


மேஷம்:

மேஷம்:

சந்திரனின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் உள்ளது. இன்றைய தினம் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடன் பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உடல் நலத்தில் அக்கறை அவசியம். பணியிடத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்யலாம். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

ரிஷபம்:

ரிஷபம்:

சந்திரன் 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகம். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். இன்று இனிமையான நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 4.

மிதுனம்:

மிதுனம்:

சந்திரன் 10வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் பணிசெய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

கடகம்:

கடகம்:

காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். மதியத்திற்கு மேல் கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோ கத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்ப் புகள் அடங்கும் நாள். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 7.

சிம்மம்:

சிம்மம்:

ராசிக்கு 8வது வீட்டில் காலை 11 மணி முதல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வம்பு வழக்குகளுக்குச் செல்லாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 2.

கன்னி:

கன்னி:

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்வதால் வீட்டில் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். கூட்டு தொழில் செய்ய முயற்சி செய்யலாம். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 6.

 துலாம்:

துலாம்:

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாயு தொந்தரவுகள் வரும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் ஏற்படும். ஜென்ம குரு, விரைய சுக்கிரனால் ஆடம்பர செலவுகள் ஏற்படும். பணத்தை பத்திரமாக வைத்திருக்கவும். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 4.

விருச்சிகம்:

விருச்சிகம்:

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்துயோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். குழந்தைகள் மீது கவனமாக இருக்கவும். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 2.

தனுசு:

தனுசு:

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களை பராமரிக்க செலவு ஏற்படும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அமைதியான நாள், வருமானம் அதிகம் வரும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 1.

மகரம்:

மகரம்:

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். செய்யும் செயல்கள் இன்றைக்கு உங்களுக்கு ஜெயமாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்று லாபம் வரும். இன்றைக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும் சிறப்பான நாள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 8.

கும்பம்:

கும்பம்:

கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். காலை 11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் பொறுமை அவசியம். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாககொடுத்த பணம் கைக்கு வரும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். ராசியான நிறம் புளு, ராசியான எண் 9.

மீனம்:

மீனம்:

காலை 11 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீட்டில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். மன நிம்மதிக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+