இன்றைய ராசி பலன்- எந்த ராசிக்காரங்க இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா?

துலாம் ராசியில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார். மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    19-07-2018-இன்றைய ராசி பலன்- வீடியோ

    சென்னை: ஆடி மாதம் 3ஆம் நாள் வியாழக்கிழமை இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம். இன்றைக்கு யாருக்கு யோகமான நாள், பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இன்றைய பலன்களில் தெரிந்து கொள்வோம்.

    கடகத்தில் சூரியன், புதன், ராகு சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் சந்திரனுடன் குரு பகவான் அமர்ந்திருக்க தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் கேது, செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    மனோகாரகன் சந்திரன் துலாம் ராசியில் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்கலக்கமாக இருக்கும். அதே போல மீனம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் மவுன விரதம் இருப்பது நல்லது.

    மேஷம்

    மேஷம்

    சந்திரன் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்ப்பதால் வீட்டில் சந்தோஷ அலைகள் வீசும்.

    இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். இன்று குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ராசியான நிறம்: சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 9.

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று நோய் நீங்கி உடலில் ஆரோக்கியம் அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். . நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. இன்று அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 1, 5.

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். இன்று வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். ராசியான நிறம் மஞ்சள் ராசியான எண் 5, 6

    கடகம்

    கடகம்

    ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கவனமாக செயல்படவேண்டிய நாள் இது. அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே வாங்கவும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள் 2, 7.

    சிம்மம்

    சிம்மம்

    ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

    இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. இன்று உங்களுக்கான நாள் என்பதால் உற்சாகமாக இருங்கள். இன்று வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். ராசியான நிறம் நீலம் ராசியான எண் 2, 9.

    கன்னி

    கன்னி

    ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் குருவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. குழந்தைகளிடம் இருந்து வரும் எதிர்பாராத நல்ல செய்தி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டு வரும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இன்று சிரிப்பு நிறைந்த நாள். ராசியான நிறம் பச்சை, நீலம், ராசியான எண்கள் 2, 7.

    துலாம்

    துலாம்

    ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார். பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள். காதல் உணர்வுகள் உற்சாகமாக இருக்கும். இன்று சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண் 4, 6.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செலவுகள் ஏற்படும்.

    இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடும். இன்று சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம் ராசியான எண் 5, 6.

    தனுசு

    தனுசு

    ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காதல் நினைவுகள் அதிகமாக இருக்கும். மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண் 3, 7.

    மகரம்

    மகரம்

    ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 2, 5.

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். இன்று ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 1, 3.

    மீனம்

    மீனம்

    ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற விவகாரங்களில் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 6.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+