மீனம் ராசிக்குள் சந்திரன் வரார் நிதானம் தேவை - 12 ராசிக்கும் இன்று பலன் எப்படி?

கும்பம் ராசிக்குள் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மீனம் ராசிக்குள் சந்திரன் இரவில் நுழைகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரனின் சஞ்சாரம் இன்றைய தினம் கும்ப ராசிக்குள் உள்ளது. இரவில் மீனம் ராசிக்குள் பிரவேசிக்கிறார் சந்திரன்.

கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இரவு வரை இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசிபலன் எப்படி என பார்க்கலாம். அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்களையும் தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ரிஷபம்

ரிஷபம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மிதுனம்

மிதுனம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கடகம்

கடகம்

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

சிம்மம்

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

கன்னி

கன்னி

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

துலாம்

துலாம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம்

விருச்சிகம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

தனுசு

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

மகரம்

மகரம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவிர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கும்பம்

கும்பம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மீனம்

மீனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். இரவு முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+